60 ஆண்டு கால கலையுலக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் கமல்ஹாசன். அவரது கலையுலகில் அவரது சாதனைகளைப் பட்டியலிட முடியாது.. காரணம் சாதனைகளின் முகவரியே கமல்ஹாசன்தான். இன்று முதல் தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.
இந்தியாவின் பல மொழிகளில் 230க்கும் மேற்பட்ட படங்கள் நடித்தவர் கமல்ஹாசன். இன்று வரை நடிப்பைக் கைவிடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பவரும் கூட. பல புதுமைகளுக்கு வித்திட்ட நாயகன்.. அதனால்தான் அவரை உலக நாயகனாக திரையுலகம் கொண்டாடுகிறது.
5 வயதில் தொடங்கியது கமல்ஹாசனின் கலைப்பயணம்.. முதல் படம் களத்தூர் கண்ணம்மா.. முதல் படத்திலேயே குடியரசுத் தலைவரின் பதக்கம் வென்ற சாதனை படைத்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் தொடங்கி இன்றைய பஹத் பாசில் வரை அத்தனை பேருடனும் நடித்தவர், நல்லுறவு பேணுபவர். ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து படைத்த சாதனைகளும், பிரிந்து நடித்த பெரும் படங்களும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவை.
நடிப்புக்காக 4 முறை தேசிய விருதுகள் பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன்தான்.. தயாரிப்பாளராக தேவர் மகனுக்கும் ஒரு தேசிய விருதைப் பெற்றவர்.
பிலிம்பேர் விருதுகள் பெறுவதில் அசகாய சாதனை படைத்தவர்.. 20 விருதுகளுக்குச் சொந்தக்காரர்.. அதுவும் 5 மொழிகளில்! எனக்குக் கொடுத்தது போதும்.. இனி வருவதை இனி வருவோருக்குக் கொடுத்து ஊக்குவியுங்கள் என்று சொல்லி பிலிம்பேரையே ஆச்சரியப்படுத்தியவர் கமல்ஹாசன்.
1990ல் பத்மஸ்ரீ, 2014ல் பத்பூஷன் விருதுகள் பெற்றவர். சர்வதேச அளவில் பல விருதுகள், பல அங்கீகாரங்கள், கமல்ஹாசனின் சாதனைகளை அலங்கரிக்கின்றன.
வீடியோ: கமல்ஹாசனின் பயணம்
கமல்ஹாசன் நடித்த 7 படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு முன்னேறியது இதுவரை தகர்க்க முடியாத இந்திய சாதனை. அவரது நாயகன் உலக அளவில் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வானது மிகப் பெரிய வரலாறு.
தான் நடித்த எந்த மொழிப் படமாக இருந்தாலும் டப்பிங் இல்லாமல் சொந்தக் குரலில் பேசும் ஒரே நடிகர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளில் வித்தகர். பல மாநில நடனங்களையும் அசகாயமாக ஆடக் கூடிய திறமையாளரும் கூட.
தசாவதாரம் படத்தில் இவர் ஏற்று நடித்த 10 வேடங்கள் ஒரு இந்திய சாதனை. சிவாஜிக்கு நவராத்திரி போல கமல்ஹாசனுக்கு தசாவதாரம் பெரும் பெருமையாக மாறியது.
3 மொழிகளில் 18 படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் 16 படங்கள் 150 நாட்களுக்கு மேலும், 59 படங்கள் 50 நாட்களுக்கும் மேலாக ஓடியுள்ளன.
நடிகராக மட்டுமல்லாமல் பல வேடம் போட்டவர் திரையுலகத் தொழிலில். தயாரிப்பாளராக- ராஜ பார்வை, விக்ரம், தேவர்மகன், ஹேராம், அமரன் என பல அபாரமான படங்களை தயாரித்த பெருமைக்குரியவர். ஹேராம் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கிய பெருமைக்குரியவர் கமல்ஹாசன். நடன உதவி இயக்குநராக, பாடகராக, காமெடியனாக, வில்லத்தனம் காட்டியவராக.. பல அவதாரம் பூண்டு அசத்தியவர் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் கலை முகம் அரசியல் முகமாக 2018ம் ஆண்டு மாறியது. மக்கள் நீதி மய்யம் கட்சியை உருவாக்கினார் கமல்ஹாசன். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரசியல் தலைவராகவும் வலம் வர ஆரம்பித்தார் கமல்ஹாசன்.
2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் 0.40% வாக்குகள், 2021 சட்டசபைத் தேர்தலில் 2.62 சதவீத வாக்குகளைப் பெற்று பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணியில் இணைந்தார் கமல்ஹாசன். அந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் கட்சி போட்டியிடவில்லை.
2025ல் நடந்த ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டு போட்டியின்றி தேர்வானார். தனது இத்தனை கால வாழ்க்கையில் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார் கமல்ஹாசன்
தான் இடம் பெற்ற அனைத்துத் துறைகளிலும், சபைகளிலும் அழுத்தமான முத்திரை பதித்த கமல்ஹாசன், நாடாளுமன்றத்திலும் தனது முத்திரையை இன்னும் அழுத்தமாக பதிப்பார் என்று நம்புவோம்.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
{{comments.comment}}