சென்னை: தமிழ்த் திரையுலக முன்னோடிகளில் ஒருவரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் நீதி மய்யம் சிறப்பு ஒன்று கூடலை சென்னையில் ஏற்பாடு செய்துள்ளது.
உலகநாயகன் என்று சிறப்பிற்குரிய நடிகர் கமல்ஹாசன் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, திரைக்கதாசிரியராக, டான்ஸராக, டான்ஸ் மாஸ்டராக, தயாரிப்பாளராக, எழுத்தாளராக, கவிஞராக பல முகம் கொண்டவர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற பெரில் கட்சியினை ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிறது. இதை சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொண்டாடவுள்ளனர்.

இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை சிறப்புடன் கொண்டாட நமது
கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரும்பிய வண்ணம், தலைவரின் பிறந்தநாளான 07-11-2023 அன்று, மாலை 3 மணிக்கு சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.வி. கன்வென்சன் அரங்கில் தொண்டர்களும், நற்பணி நம்மவர்களும் சூழ, வெகுசிறப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.
ஆழ்ந்த அறிவும், எல்லையில்லா ஆற்றலும், பலகோடி மக்களை ஈர்க்கும் வல்லமையும், தேர்ந்த ஆளுமையும் கொண்ட நமது தலைவரின் பிறந்தநாளை கொண்டாடவும், நாடாளுமன்றத் தேர்தலை எழுச்சியோடு எதிர்கொள்ளவும் நவம்பர் 7 (செவ்வாய்க்கிழமை) அன்று நாம் அனைவரும் ஒன்றுகூடுவோம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், நற்பணி நம்மவர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள் மற்றும் ம.நீ.ம உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் நம்மவரின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடிட வரவேற்கிறோம். நாளை நமதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}