சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்த நாள். திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பல்துறைப் பிரமுகர்கள் கமல்ஹாசனை வாழ்த்தியுள்ளனர்.
களத்தூர் கண்ணமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது தக் லைப் வரை அவர் தொடர்ந்து மிரட்டிக் கொண்டேதான் இருக்கிறார் நடிப்பில். இவருடைய படங்கள் என்றால் தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். ஒரு காலத்தில் காதல் இளவரசன், பின்னர் காதல் மன்னன், புன்னகை மன்னன், ஆண்டவர் என்று பற்பல பெயர்களால் அறியப்பட்ட கமல்ஹாசன் இன்று உலக நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.
நடிப்புக்காக 4 தேசிய விருதுகளும், சிறந்த தயாரிப்பாளருக்கான ஒரு தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகளும், ஆந்திரா அரசின் 4 நந்தி விருதுகளும் ,19 பிலிம்பேர் விருதுகளும், பல இந்திய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தவர். விருதுகளே எனக்கு வேண்டாம், போதும் என்று சொல்லி பிலிம்பேருக்கு கடிதமே எழுதியவர் கமல்ஹாசன்.
இன்று கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் முன்பு அவருடைய ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் காலையிலேயே கூடியிருந்தனர். ரசிகர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கலை உலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நலம் சூழ வாழிய பல்லாண்டு என்று கூறியிருந்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட வாழ்த்து பதிவில், நீங்கள் ஒரு சிறந்த கலைஞராகவும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலராகவும் மக்களின் இதயங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளீர்கள். உங்களுக்கு மேலும் பல மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வருடங்கள் அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வெளியிட்ட பதிவில், ஹாப்பி பர்த்டே கமல்ஹாசன் சார்.. உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யா, அமீர்கான், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நடந்த கமல்ஹாசன் பிறந்த நாள் விழாவிலும் பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}