சென்னை: மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மநீம தலைவர் கமலஹாசன்.
தமிழக மாநிலங்களவை எம்பிகளாக உள்ள திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆறு பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் காலியாக உள்ள அப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்கி உள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட நான்கு நான்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தரப்பட்டது. அதேபோல் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர் சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதிமுக வை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனைக் மேற்கொண்டு வருகிறது. இதில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மநீம தலைவர் கமலஹாசன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதனை வரவேற்ற முதல்வர் கமலஹாசனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்வரை சந்திப்பிற்குப் பிறகு கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் அழைத்ததின் பேரில் ராஜ்ய சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி எங்கள் கட்சி இடம் சொல்லி இருக்கிறார். நாங்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார். முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினேன். அந்த அவையில் பேச என் குரல் தேவை என்பதால் திமுக கூட்டணிக்கு வந்துள்ளேன். ஆனால் தமிழ்நாட்டுக்காக எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
ஐங்கரன் (நெடுங்கதை)
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
{{comments.comment}}