டெல்லி: ராஜ்யசபா எம்.பியாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஒரு இந்தியனாக இதை கெளரவமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காலியான 6 ராஜ்யசபா எம்.பி பதவியிடங்களுக்கு நடந்த தேர்தலில் கமல்ஹாசன், பி. வில்சன், ராஜாத்தி என்கிற சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் திமுக கூட்டணி சார்பிலும், அதிமுக சார்பில் இன்பதுரை, எம். தனபால் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். இதற்காக கமல்ஹாசன் நேற்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது, எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. டெல்லியில் விரிவாகப் பேசுகிறேன். ஒரு இந்தியனாக இதைக் கெளரவமாக பார்க்கிறேன் என்று கூறினார் கமல்ஹாசன்.
அரசியல் தலைவராகவும், சினிமா நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். சமீபத்தில்தான் அவரது தக்லைப் படம் வெளியானது. தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், ஓடிடியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்3 படம் வெளியாகவுள்ளது.
தான் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தனது நண்பரான நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன் என்பது நினைவிருக்கலாம்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}