சென்னை: ராஜ்யசபா எம்.பியாக மநீம கட்சி தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று பதவியேற்றார்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த முகமது அப்துல்லா, சண்முகம், பி. வில்சன். அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், கடந்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, மாநிலங்களவை எம்பியாக இன்று பதவியேற்க, நேற்றே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்ய உள்ளேன். பெருமையோடு இன்று டெல்லி செல்கிறேன். மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று ராஜ்யசபா எம்பியாக கமலஹாசன் பதவி ஏற்றார். அவருடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவியேற்றனர். தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் பதவியேற்றனர்.
பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல...மன்னிப்பை ஏற்க மாட்டேன்: நடிகை கவுரி கிஷன் பதிவு..!
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை... அண்ணாமலை விமர்சனம்!
தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!
அம்மாவின் அன்பு!
கடன் -தலைக்குனிவு
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!
ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?
{{comments.comment}}