சென்னை: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் திரையுலகிலிருந்து பலர் விருது பெற்று அசத்தியுள்ளனர். அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பியும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. இதையடுத்து விருது பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒரு காலத்தில் தேசிய விருது என்றாலே கமல்ஹாசன் தான் தமிழுக்கு வாங்கி வருவார். அப்படிப்பட்ட கமல்ஹாசன் தற்போது விருது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இதுதொடர்பாக போட்டுள்ள எக்ஸ் பதவில் குறிப்பிட்டுள்ளதாவது:
2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை ‘பார்க்கிங்’ திரைப்படம் வென்றிருக்கிறது.
‘பார்க்கிங்’ திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.
வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானுக்கும் கமல்ஹாசன் வாழ்த்து
இதேபோல ஹேராம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஷாருக் கானுக்கு முதல் முறையாக தேசிய விருது கிடைத்திருப்பதற்கும் கமல்ஹாசன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது உங்களுக்குக் கிடைத்துள்ளதற்கு பாராட்டுகள். உலக சினிமாவுக்கு நீங்கள் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக நீண்ட காலம் காத்திருந்த அங்கீகாரம் இது.
12த் பெயில் படம் மிகச் சிறந்த மாஸ்டர்பீஸ். என்னை நெகிழ வைத்த படமும் கூட. பல லட்சம் பேரை இது இன்ஸ்பைர் செய்த படம். விது வினோத் சோப்ரா மற்றும் விக்ராந்த் மாஸி ஆகியோருக்கு கிடைத்துள்ள கெளரவம் மிகச் சரியானதே.
சிறந்த நடிகை விருது பெறும் ராணி முகர்ஜிக்கு இந்த தேசிய அங்கீகாரம் மிகப் பொருத்தமானது. ராணிக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!
இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
{{comments.comment}}