- மஞ்சுளா தேவி
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் ட்ரீட் ஆக வரும் நவம்பர் 3ஆம் தேதி நாயகன் திரைப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. 36 வருடங்களுக்குப் பிறகு நாயகன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 மற்றும் கல்கி போன்ற படங்களில் கமிட்டாகி உள்ளார். அடுத்த வருடம் இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதுகுறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதுதவிர, அக்டோபர் 1 முதல் பிக் பாஸ் சீசன் 7 தொகுப்பாளராக களம் இறங்கப் போகிறார் கமல்ஹாசன். இடையில் லோக்சபா தேர்தல் வரப் போகிறது. ஆக, கமல்ஹாசன் சினிமாவிலும், டிவியிலும், அரசியலிலும் நிற்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் முத்திரை பதித்த, நாயகன் படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.
1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம்தான் நாயகன். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சரண்யா நாயகியாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த காலகட்டத்தில் நாயகன் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெள்ளி விழா கொண்டாடியது.
வேலு நாயக்கர் வேடத்தில் கமல்ஹாசன் வாழ்ந்திருப்பார். அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன். வசனம் எல்லாம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது. "நான் அடிச்சா நீ செத்துருவ.. நாலு பேரு நல்லாருக்கணும்னா எதுவுமே தப்பில்லை.. நாளைக்கு கணக்குப் பரீட்சை இருக்கு.. சீக்கிரம் விட்ருவீங்களா.. நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா".. போன்ற வசனங்கள் சில துளிகள்.
இப்படத்திற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நாயகனுக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மற்றும் கலை இயக்குனர் தோட்டா தரணிக்கும் தேசிய விருது கிடைத்தது.
நாயகன் படத்திற்குப் பிறகுதான் அது போன்ற படங்கள் தமிழில் நிறைய வர ஆரம்பித்தன. ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம், தளபதி, விஜய் நடித்த தலைவன் போன்ற படங்களும் கூட கிட்டத்தட்ட நாயகன் பாணி படங்கள்தான். 36 வருடங்களுக்குப் பிறகு நாயகன் படம் ரீ ரிலீஸ் ஆவதால் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை ரசிகர்களும் கூட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}