- ஸ்வர்ணலட்சுமி
சிறுதானியங்களின் பயன்பாடு இன்றைய காலங்களில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் அன்றாட உணவில் சிறுதானியங்களை சேர்த்து வருகின்றனர்.
"Pearl millet" என்று அழைக்கப்படும் கம்பு பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவு. கோடை வெப்பம் அனைவரையும் வாட்டி வரும் நிலையில் நம் உடலினை எப்படி உஷ்ணம் தவிர்த்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு கம்பு பயன்படுத்தி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனை பற்றிய ஒரு சிறு தகவல் இந்த பழமொழி "உஷ்ணம் தவிர்க்க கம்மங்களி" வாயிலாக தெரிந்து கொள்வோம்.
1. கம்பு களி செய்து உண்பதனால் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுக்கும்.
2. தசைகளுக்கு நல்ல இறுக்கம் தந்து உடல் பலத்தை பெருக்கும்.
3. உடல் சூடு குறைய: சுற்றுப்புற சூழலினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு அதிக உஷ்ணம் ஏற்படுகிறது .அதனால் நிறைய பாதிப்புகள் வரும் எனவே கம்மங் களியை நன்றாக கூழ் போல் செய்து மோர் சேர்த்து பருகிவர உடலில் ஏற்படும் அதிக உஷ்ணம் தவிர்க்கப்படும்.
4. செரிமானம் :எளிதில் நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் செரிமானம் அடைய வேண்டும். கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் இந்த கம்பங்களி.
5. நோய் எதிர்ப்பு திறன் மேம்பட்ட உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது .கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன.6. பெண்களுக்கு : பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், அதிக ரத்தப்போக்கு இருக்கும். கம்மங்கூழ் அல்லது கம்மங் களி சாப்பிட இந்த பிரச்சனை தீரும்.
7. இளமையான தோற்றம்: கம்பு உட்கொள்பவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க தோல் பளபளப்பை தரும் .இளமை தோற்றம் தந்து முதுமை அடைவதை தள்ளிப் போடும். கம்பு உட் கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால் இளமையாக தோன்றலாம்.
8. உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி ,இரத்தத்தை தூய்மை செய்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
9. கம்பு உட்கொள்ள குடல் புற்று ஏற்படுவதை தடுக்கிறது.
10. குழந்தை பெற்ற தாய்மார்கள் கம்பு உட்கொள்ள அதிக தாய்ப்பால் சுரக்கும். இளஞ்சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.
11. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பில்லிங்கான உணவு .உடல் சக்திகளை தரவல்லது.
12. முடி கொட்டாமல் இருக்க "கெரோட்டின் " எனும் புரதம் அவசியம். இது கம்பில் அதிகமாக உள்ளது .எனவே ,கம்பு உட்கொள்ள முடி கொட்டும் பிரச்சனை தீரும்.
13. நரம்புகளுக்கும் புத்துணர்வு தருகிறது கம்பு
14. வளரும் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாக தர வேண்டிய தானியம் கம்பு .பிற தானியங்களை விட அதிக சுவை மிகுந்தது.
15. அரிசியைவிட கனிமம், புரதம் ,கால்சியம், இரும்பு ,உயிர் சத்து அதிகம் உள்ள தானியம் கம்பு.
16. கம்பு உட்கொண்டால் ரத்த சோகையை வெல்லும் .பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கிறது.
17. ஆரோக்கியமான இதயம்: கம்புவில் லிக் நின், மெக்னீஷியம், பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் உள்ளன .இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும் பெரும் பங்கு வகிக்கிறது.
இத்தனை பயனுள்ள கம்பங்களி எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்ப்போம்
செய்முறை:
1. ஒரு கப் கம்பு நன்றாக கழுவி தண்ணீர் வடித்து மிக்ஸியில் சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்
2. பிறகு இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி அடிகனமான பாத்திரத்தில் சிம்மில் வைத்து நன்றாக வேக வைக்கவும். கைவிடாமல் கிளறவும் . குக்கரில் செய்பவர்கள் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் குக்கர் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் விடவும். அருமையான கம்பங்களி ரெடி.
"உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி" செய்து சாப்பிடுங்கள் .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
முதல்வரே பரந்தூருக்கு செல்லுங்கள்.. இல்லாவிட்டால் மக்களுடன் தலைமைச் செயலகத்திற்கு வருவேன்.. விஜய்
திமுக, பாஜகவிற்கு எதிரானதாகதான் தவெக கூட்டணி இருக்கும்: தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!
2026 சட்டசபைத் தேர்தல்: விஜய்தான் முதல்வர் வேட்பாளர் .. பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. தவெக அதிரடி!
இனி வரும் நாட்களில் அதிமுக நடத்தும் போராட்டங்களில் பாஜக இணைந்து செயல்படும்: நயினார் நாகேந்திரன்!
தங்கம் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது... எவ்வளவு குறைவு தெரியுமா?...
நீண்ட தாமதத்திற்குப் பிறகு.. இந்தியாவுக்கு வரவுள்ள 6 அமெரிக்க அப்பாச்சே தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
வெள்ளை உளுத்தம் கஞ்சி (urad dal porridge).. பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு
தவெக செயற்குழு கூடுகிறது.. விஜய் சுற்றுப்பயணம் எப்போது.. நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 04, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிக்காரர்கள்
{{comments.comment}}