பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருவதால் கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள குடகு, உத்தர்கன்னடா மாவட்டங்களில் நேற்று முதல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் திரிவேணி சங்கமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெங்களூர் குடகு தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் சூழலில் இன்று அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கபினி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த மிக கனமழையால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு அணைகளும் நிரம்பினால்தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதால் இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.
கேரளாவிலும் செம மழை
கேரளாவில் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது இந்த பருவமழை மேலும் தீவிரமடைந்தது வயநாடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியிலும் கூட பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலையிலிருந்து டெல்லியில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம்.
அதேபோல கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
                                                                            தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
                                                                            கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
                                                                            அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
                                                                            சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
                                                                            கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
                                                                            'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
{{comments.comment}}