என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.. பிளடி பெக்கர்.. நெல்சனைப் பார்த்து உருகிய கவின்

Oct 19, 2024,02:48 PM IST

சென்னை:   ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம் உருவாக காரணம். சினிமாவில் எனக்கு ஒரு இடத்தை கொடுத்தவர் நெல்சன் சார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இந்த படம் இருக்கும் என நடிகர் கவின் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


இயக்குநர் நெல்சன்  தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம்  தான் பிளடி பெக்கர். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சுஜாதா சாரங்க் ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். இதில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், அக்‌ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர்  என பலர் நடித்துள்ள  இந்த படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக தயாராக உள்ளது. 


இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் கவின் பேசியதாவது:




ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம் உருவாக காரணம். நான் இதுவரை என்னென்ன விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்தவர் நெல்சன் சார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இது இருக்கும். ஏனெனில், சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் சார் தயாரிக்கும் முதல் படம். 


நமக்கு அமைந்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை. ’ப்ளடி பெக்கர்’ எளிமையான கதைதான். உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் எல்லோருமே அவ்வளவு எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்டெக்னிக்கல் டீமும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள் என கூறியுள்ளார்.


நடிகர் பார்த்திபன்:


படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. காமெடி செய்து போர் அடித்திருந்த சமயத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் விதமாக சீரியஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்பு! ஹேப்பி தீபாவளி என கூறினார்.


ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்:


இயக்குநர் சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். கமர்ஷியலாக அழகாக படம் வந்திருக்கிறது. இவருடன் பணிபுரிந்ததில் நிறைய விஷயங்கள் சவாலாகவும் புதிதாக கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் இருந்தது. படத்தின் கதை கேட்டபோது இது எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்தது. அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். கவின் சிறப்பான நடிகர். சிங்கிள் டேக்கில் ஒரு காட்சியை நடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் அசாத்திய உழைப்பைக் கொடுத்திருக்கின்றனர்என கூறியுள்ளார். 


நடிகை பிரியதர்ஷினி:




நெல்சன் சார் தயாரிப்பில் நான் நடித்திருப்பதை இப்போது வரையிலும் நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது வித்தியாசமான பிளாக் காமெடி படம். எல்லோரும் சின்சியராக நடித்திருக்கிறார்கள். என்னுடைய காமெடி சென்ஸ் நடிப்பை இன்னும் இம்ப்ரூவ் செய்ய கவின் உதவினார். தீபாவளிக்குப் படம் வெளியாகிறது என கூறினார். 


நடிகர் ரெடின் கிங்ஸ்லி:


என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘ப்ளடி பெக்கர்’. ஏனெனில், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. எல்லோரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மிகச்சரியாக எடுத்துள்ளார். டிரெய்லருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. நிச்சயம் படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படத்துக்குப் பிறகு கவினின் நடிப்பிற்கு பெரிய பாராட்டு கிடைக்கும். நான் வாழும் வாழ்க்கை, சாப்பாடு, டிரஸ் எல்லாமே நெல்சன் சார் கொடுத்தது. அவருக்கு நன்றி என கூறினார். 


இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்:


நான் இந்த இடத்திற்கு வர நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். அதில் நெல்சன் சார் முதன்மையானவர். அவருக்கு நன்றி. இயக்குநராக அவர் எங்களிடம் நிறைய கேள்வி கேட்பார். என் படத்தை தயாரிக்கும்போதும் அப்படித்தான் இருப்பார் என நினைத்தேன். ஆனால், எனக்கான எல்லா சுதந்திரமும் கொடுத்தார். அவருக்குப் படம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். படம் ஆரம்பிக்கும் முன்பிருந்தே கவின் எனக்கு நல்ல நண்பன். நான் எழுதியிருந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ரெடின் அண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என்னுடைய டெக்னிக்கல் டீம் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். அவர்களுக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்