நெல்லை: 5 நாட்களுக்கு பின்னர் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட இளைஞர் கவினின் உடல். நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தால் கவின் கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் சகோதரரான சுர்ஜித் கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கவினின் பெற்றோர் கூறி போராட்டத்தில் ஈடுட்டனர்.

இந்த வழக்கில் சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தந்தை அவரது தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் உறவினர்கள் கூறி வந்தனர். இதற்கிடையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின்னர் கவினின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவமனையில் கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்து கவினின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
{{comments.comment}}