சென்னை: பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என்று மத்திய அரசை நோக்கி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்க மறுத்து வருவதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் மத்திய அரசிற்கு தங்களது எதிர்ப்புகளையும், கண்டங்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் இன்று இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும். அகழாய்வு பணிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் பிராந்திய உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசிற்கு கேள்வி ஒன்றை எழுப்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒ ன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள்.

கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?
மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? என்று தெரிவித்துள்ளார்.
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
{{comments.comment}}