சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணம் இன்று கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இது என்ன மாயம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார், பைரவா, அண்ணாத்த, சண்டக்கோழி 2, உள்ளிட்ட படங்களில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக பழங்கால நடிகை சாவித்திரி சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி நடிகையர் திலகம் படத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படத்திற்காக அனைவரிடமும் பாராட்டைப் பெற்ற கீர்த்தி சுரேஷ் இப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டிச் சென்றார் .
32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பள்ளி காலத்திலிருந்து தற்போது வரை 15 வருட நண்பராக திகழ்ந்த ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தனது instagram பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதல் கணவரை கரம் பிடிக்க இருப்பதாகவும், கோவாவில் நாளை நடைபெற உள்ள இந்த திருமண வைபவத்தில் மிக நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொள்வார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த, துபாய் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் வைபோகம் இன்று கோவாவில் இனிதே நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் பச்சை மற்றும் மஞ்சள் நிற காம்பினேஷனில் பஞ்சகச்ச முறையில் புடவை அணிந்து மணக்கோலத்தில் மிக அழகாக காட்சியளித்தார். ஆண்டனி தட்டில் தாலி கட்டும் போது நடிகை கீர்த்தி சுரேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
திருமணம் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் நடந்ததாம். திருமண நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள், உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பரான விஜய் பட்டு வேஷ்டி சட்டையுடன் சும்மா மாஸாக கலந்து கொண்டுள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷின் திருமணம் வைபோகத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. இதனை தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தனது பாடிகார்டுகளுடன் ஜாலியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் விஜய். அந்தப் புகைப்படமும் வைரலாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னங்க பெரிய பணம்.. மக்களுக்காக எதையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாம்.. அரியலூரில் விஜய்
Ilaiayraja: அமுதே தமிழே அழகிய மொழியே.. எங்கள் உயிரே.. இளையராஜாவுக்கு கோலாகல பாராட்டு விழா
C.M.சிங்காரவேலன் எனும் நான்... புதிய படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன்.. செம ஸ்டில் வெளியீடு!
பழைய, புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக கோட்டையைத் தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Vijay maiden Campaign: விஜய்யின் முதல் சட்டசபைத் தேர்தல் பிரச்சார பேச்சு எப்படி இருந்தது?
போருக்கு தயாராவதற்கு முன் குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்துள்ளேன்: தவெக தலைவர் விஜய்!
பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?
விஜய் வருகையால்.. திணறிப் போனது திருச்சி.. விமான நிலையத்தை அதிர வைத்த தொண்டர்கள்
சொன்னீர்களே? செய்தீர்களா?... திமுகவிற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பிய தவெக தலைவர் விஜய்!
{{comments.comment}}