திருவனந்தபுரம்: கேரளாவில் இனி யாரும் மிக ஏழ்மையில் இருக்க மாட்டார்கள். நவம்பர் 1 ஆம் தேதி, கேரளாவின் பிறந்த நாளன்று, முதலமைச்சர் பினராயி விஜயன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், பிரபல திரைப்பட நடிகர்களான கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். மாநில அமைச்சர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். எதிர்க்கட்சித் தலைவரும் அழைக்கப்படுகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.பி. ராஜேஷ் மற்றும் கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி ஆகியோர் கூறுகையில், கேரளா மீண்டும் வரலாற்றை படைக்கிறது, மிக ஏழ்மையை ஒழிப்பதன் மூலம். இந்த இலக்கை அடைந்த முதல் மாநிலம் மட்டுமல்ல, உலகிலேயே இரண்டாவது பிராந்தியம் என்ற பெருமையையும் கேரளா பெற்றுள்ளது என்றார்.
இந்த மைல்கல்லைக் கொண்டாட, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சரி அது என்ன மிக ஏழ்மை?
மிக ஏழ்மை என்பது, ஒரு தனிநபர் அல்லது குடும்பம் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையைக் குறிக்கிறது.
உலக வங்கி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2.15 டாலருக்கும் (சுமார் 180 ரூபாய்) குறைவாக சம்பாதிப்பவர்களை மிக ஏழ்மையில் உள்ளவர்களாக வரையறுக்கிறது. இந்தியாவில், ஊட்டச்சத்து, வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் போன்ற பல பரிமாணங்களை உள்ளடக்கிய அளவுகோல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதை NITI Aayog-ன் Multidimensional Poverty Index (MPI) போன்ற கருவிகள் மூலம் அளவிடுகிறார்கள்.
கேரளாவின் இந்த அறிவிப்பு, கேரளாவின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் ஒரு உத்வேகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}