கேரளா கிரைம் ஸ்டோரி (2)

Jan 10, 2026,11:57 AM IST

- எம்.கே. திருப்பதி


தொடர்ந்து அறைக்கதவு தட்டப்பட்டுக் கொண்டிருக்க, உள்ளே இருந்த இருவருக்கும் நுரையீரலில் காற்று புக மறுத்தது. இதயம் ஏகத்துக்கு துடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் பயப்பார்வை பார்த்துக் கொண்டனர்.


"எ... என்னங்க.. இப்போ என்ன பண்றது? வந்திருக்கிறது யாருன்னு தெரியலையே... எவ்வளவு நேரம் கதவை திறக்காம இருக்க முடியும்?"


" மூடு ஆப் ஆகாத... கீ ஹோல்ஸ் வழியா வந்திருக்கிறது யாருன்னு பாரு.... "


" சூழ்நிலை தெரியாம உளறாதீங்க. இந்த டோர்ல எங்க கீ ஹோல்ஸ் இருக்கு?"


 பேசிக்கொண்ட குரல்கள் ஈனஸ்வரத்தில் வந்து விழுந்தது.

' தட் தட் தட்...' மறுபக்கம் கதவு தொடர்ந்து தட்டப்பட்டது.


" ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா இருப்போம். அதுக்கு பிறகும் தட்டிக்கிட்டே இருந்தாங்கன்னா திறப்போம் "


" அப்படியே செய்யலாம். இந்த நொடி பிரச்சனையை கொஞ்சம் தள்ளி போடலாம்.. " 




இருவரும் ஊமையாகி அணைந்து போனார்கள்.


 ஒரு மூன்று நிமிட காத்திருப்புக்கு பின் வெளியே ஆள் அரவம் மற்ற நிசப்தம் நிலவியது. அவன் மெதுவாய் மிக மெதுவாய் எழுந்து தாளுக்கு வலிக்காத மாதிரி அறைக்கதவை திறக்க, கடல்க்காற்று வேகமாய் வந்து முகத்தில் மோதியது. வெளியே ஒருவருமில்லை. அவனுக்கு அப்பாடா என்றிருக்க அவள் அவனை நெருங்கினாள். அவன் சைகையால் வேண்டாம் என்று  சொல்ல அவள் ரூமுக்கு பின் வாங்கினாள். 


 கீழே மும்பையின் பரபரப்பு  வாகனங்களாய் ஓடிக்கொண்டிருந்தது. டீக்கடையிலும் பீடா கடையிலும் விறுவிறுப்பான வியாபாரம் பொருளாதாரத்தை தூக்கி பிடித்துக் கொண்டிருக்க,அவன் எதிலும் லயிக்கவில்லை. ரயில் எஞ்சினாய் மனம் படபடக்க அறைக்கு திரும்பும் நேரம் அந்த குரல் கேட்டது...!


" ஹலோ சாப்.. " 


ரூம் பாய் வெற்றிலைக்கறை பற்களோடு போலியாய் சிரித்தான். இவன் திடுக்கிட்டு நின்றான்.


" சாப்பாடு வேணுமான்னு கேட்க ரொம்ப நேரமா கதவை தட்டினேன். நீங்க திறக்கவே இல்ல சாப்.. "


அவன் ஹிந்தியில் சொல்ல இவன் எரிந்து விழுந்தான்.


" ஏதாவது தேவைனா நானே சொல்றேன். இனிமேல் நீ கதவை தட்டாதே பசிச்சா எனக்கு தின்ன தெரியாதா? " 

இவனும் ஹிந்தியில் சொன்னான்.


" ஏன் சார் கோவப்படுறீங்க ஏதாவது பிரச்சனையா? "


" யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. நீ உன் வேலையை மட்டும் பாரு.. "   அந்த ரூம் பாய் அவனை முதல் முறை சந்தேக கண்ணோடு பார்த்தான்.


**


டாக் ஸ்வாட் 'ராணா' வரவழைக்கப்பட்டு, எஸ்டேட் மேலும் கலவரம் காட்டியது. விஷயம் தெரிந்து உள்ளூர்வாசிகள், லிஜி, பிஜூ தாமஸ் உறவினர்கள் என   கும்பல் கூடிப்போயிருந்தது!


எஸ்டேட் மேனேஜர் அப்துல்லா நடுவயதில் இருந்தார்.முன் மண்டை வழுக்கை வாங்க தொடங்கியிருந்தது. இந்த நிமிடம் இன்ஸ்பெக்டர் முன் எச்சில் விழுங்கி, திரு திருவென நின்றிருந்தார். 


" அந்த ஆளு கேரக்டர் எப்படி? "      இன்ஸ்பெக்டர்.


" சார் அவன பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. வழக்கம்போல தோட்ட வேலை பார்க்க போனவன்தான்... திரும்பலன்னு லிஜிதான் சொன்னாங்க. மிஸ்ட்ரியா இருக்கு ..!"


" உங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் எப்படி? "


 "நான் அவன ஒரு லேபர் ரேஞ்சுக்கு பார்த்ததில்லை. சில நேரங்களில் ரெண்டு பேரும் சேர்ந்து கூட ட்ரிங்க் பண்ணுவோம் சார். வெரி டெடிகேட் பர்சன் ... "


" வாட்ட அபௌட் ஹிஸ் வைப்? "


 "சார் அவங்க கூட எனக்கு பேசறதுக்கு எந்த காரணமும் இல்லை. பட் கிளீன் பண்ண வரும்போது ஒரு சின்ன ஸ்மைல் பண்ணுவாங்க தட்ஸ் ஆல். " 


" எத்தனை வருஷமா இங்க ஒர்க் பண்றாங்க? "

" நாலு வருஷமா . "


" குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு அப்படின்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? "


" அப்படி ஏதும் அவன் என்கிட்ட சொன்னது இல்ல சார்.. தண்ணி போடறவன் அப்படி ஒன்னு  இருந்திருந்தா உளறியிருப்பான் ... "


"ம்ம்ம்.." மாதவன் மேனன் மோவாயை தேய்த்துக் கொண்டு,


" இங்க மொத்தம் எத்தனை பேர் வேலை பார்க்கிறாங்க " என்றார்.


" மொத்தம் 12 பேர். எல்லாரும் வேலை முடிச்சுட்டு அவங்க வீட்டுக்கு போயிடுவாங்க. இவங்க ரெண்டு பேர் மட்டும் தான் இங்கேயே தங்கி வேலை செய்றாங்க.. "


" எஸ்டேட் ஓனர் எப்படி டைப்? "


" சாகிர் சார் ஜெனியூன் பெர்சன் சார்..அவர் இங்க அதிகமா வரமாட்டார். நான்தான் எல்லாம் பாத்துப்பேன். இங்கிருந்து ஒரு 40 கிலோமீட்டர்ல அவருக்கு இன்னொரு எஸ்டேட் இருக்கு. அங்கதான் அவரு மோஸ்ட்லி டைம் ஸ்பென்ட் பண்ணுவார். வாரம் பத்து நாள் ஒருமுறை இங்குவந்து தலை காட்டிட்டு போவார் ... "


" சார் ராணா இஸ் ரெடி ஃபார் சர்ச்...!"   என்று dog handler வினித் குறுக்கிட, " ப்ரொசிட்.. " என்றார் இன்ஸ்பெக்டர் மாதவன் மேனன்.


பிஜு தாமஸின் ஒரு ஆடையை அதன் மூக்கிடம் காட்ட அதை அந்த ராணா நுரையீரல் பிதுங்கும் அளவுக்கு மோப்பம் பிடித்து முடித்து,வேலையை தொடங்கியது. பிஜு தாமஸ் லிஜி தங்கி இருந்த வீட்டிலிருந்து ராணா வேட்டையை ஆரம்பித்து இருந்தது.


வீடு தோட்டம் ஆபீஸ் என்று ராணா ஓடிக்கொண்டிருக்க டாக் எக்ஸ்பர்ட்டும் அதற்கு ஈடு கொடுத்து தட்டு தடுமாறி சமாளித்துக் கொண்டிருந்தார். இறுதியில் ஒரு சிறிய குட்டை மாதிரியான இடத்தில், செடி கொடி களுக்கு மத்தியில் தோண்டி மூடப்பட்ட ஒரு இடத்தில் நின்று மூச்சிரைத்தது ராணா.


கூடச் சென்ற கான்ஸ்டபிள்... " சார் சம்திங் ஹியர் சார்...!" என்று கத்த, கும்பலும் அந்த இடத்தை நோக்கி நகர்ந்தது இன்ஸ்பெக்டர் மாதவன் மேனன் பிளாஸ்க்கில் இருந்த மசாலா டீயை குவளையில் ஊற்றி உறிஞ்சி கொண்டு ஸ்பாட்டை நோக்கி ஊர்ந்தார்.


 அடுத்து வந்த அரை மணி நேரத்தில் பாரன்ஸிக் பீப்பிள்ஸ் தோண்டி எடுக்கப்பட்ட பிணத்தை சுற்றி, டிவைசர் மாதிரி டூல்ஸ்களை கொண்டு கிடைத்த சோர்ஸ்களை சிறிய பிளாஸ்டிக் கவரில் போட்டு லாக் செய்து கொண்டிருந்தனர்.


" பாடி எரிக்கப்பட்டு இருக்கு மிஸ்டர் முரளிதரன்.. கொலை நடந்து எவ்வளவு நாள் இருக்கும்னு ஏதாவது அசெம்ப்ஷன் இருக்கா? " மாதவன் மேனன் கேட்க, பாரன்ஸிக் முரளிதரன், 


" தட் ஈசி சார்...  Nearly accurate result சொல்லலாம்...! தோண்டி மூடின மண்ண வெச்சே ரேண்டமா சொல்லலாம்  மேபி  3 --4  டேய்ஸ்...!"


லிஜி அழுகையின்  டெசிபல் இப்போது தெர்மாமீட்டர் ரீடிங் மாதிரி ஏறி இருந்தது . ஒன்றிரண்டு உறவினர்கள் ஒப்புக்கு அழுது கொண்டிருக்க, ஊர் மக்கள் உச்சுக்கொட்டி உறைந்து போய் நின்றனர்.


( அடுத்த வாரம்)


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

news

தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்

news

ஜனநாயகன் விவகாரம்...சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு

news

திரைப்பட தணிக்கை முறையில் சீர்திருத்தம் தேவை: கமல் ஹாசன் வலியுறுத்தல்

news

PSLV-C62 ஜனவரி 12-ல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவுகிறது இஸ்ரோ

news

'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்'...தமிழக அரசு அரசாணை வெளியீடு

news

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியமா? அப்படி குடித்தால் என்ன நடக்கும்?

news

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்': சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

news

போராட்டங்களுக்கு மெளனம்... ஒரு படத்திற்கு இத்தனை முக்கியத்துவமா? - சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்