முதல் ஆளாக.. கோட் பட ஷ்பெஷல் ஷோவுக்கு.. ஓகே சொன்ன கேரளா.. விஜய் ரசிகர்கள் ஹேப்பி!

Aug 27, 2024,05:02 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது கேரள அரசு. இந்த அறிவிப்பால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் ஏகோபித்த மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.


விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்  என்ற பெயரின் சுருக்கம் தான் தி கோட். இப்படத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கபட்டுள்ளதால் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அது மட்டும் இன்றி விஜய் விரைவில் நடிப்பை முடித்துக் கொண்டு, முழு நேர அரசியலில் குதிக்க இருப்பதால், விஜய் ரசிகர்கள் விஜய் படங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.




இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.


தி கோட் படத்தின் இறுதிக்காட்சிகள் கேரளாவில் தான் படமாக்கப்பட்டன. அப்போது கேரளா வந்த விஜய்க்கு கேளராவில் உள்ள விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட அளவில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் விஜய் வருகை குறித்து ஆரவாரம் செய்தனர். கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் கேளரா சென்ற போது ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருந்தனர். தமிழகத்தைப் போல கேளராவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.


இந்நிலையில், தி கோட் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு அதிகாலை நடைபெறும் சிறப்பு காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் திகைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களும் கேரளாவிற்கு படையெடுக்க முடிவு செய்துள்ளதாக தீவிர விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்