- ஆ.வ. உமாதேவி
2026 இல் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்கள் எவை என உலகம் முழுமைக்குமான ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பை பிரிட்டனின் பிரபல "Rough Guides" டிராவல் நிறுவனம் மேற்கொண்டது அந்நிறுவனம் உலகின் சிறந்த 26 சுற்றுலா இடங்களை பட்டியலிட்டு காட்டி உள்ளது. இதில் கேரளா 16 வது இடத்தை பிடித்துள்ளது. மொரோக்கோவின் மராகேஷ் முதலிடம் பிடித்துள்ளது.
நமது இந்திய நாட்டில், தென்னிந்திய பகுதியில் இருக்கும் இயற்கை பேரழகு கொஞ்சும் கேரளா, நமக்கு அண்டை மாநிலமாக இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான்.
கேரளா பற்றிய சில பொதுவான தகவல்கள்:
கேரளா இயற்கை அழகு நிறைந்த மாநிலம் ஆகும். இது இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இது பசுமையான இயற்கை, கடற்கரைகள், மலைகள், மசாலா தோட்டங்கள் நிறைந்த வளமான மாநிலம் ஆகும். இது கடவுளின் சொந்த நாடு (Gods own country) என்று அழைக்கப்படுகிறது.
"சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு, சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்" என்று பாரதியாரும் பாடியுள்ளார்.
சங்க காலத்தில் சேர மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கேரளா இருந்தது. முசிறி போன்ற துறைமுகங்கள் வழியாக உலக நாடுகளுடன் மசாலா பொருட்களின் வர்த்தகத்தில் கேரளா முக்கிய பங்கு வகிக்கிறது.
1956 ஆம் ஆண்டு மொழி வாரி மாநில மறு சீரமைப்பு சட்டத்தின்படி திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் மற்றும் தென் கனரா மாவட்டங்களின் சில பகுதிகளை இணைத்து இந்த மாநிலம் உருவாக்கப்பட்டது.
இங்குள்ள தேக்கி ஏரி, மூணாறு தேயிலை தோட்டங்கள், வயநாடு மலைகள், கோவளம் கடற்கரை போன்றவை முக்கிய இடங்களாகும்.
தேங்காய், மசாலா பொருட்கள் நிறைந்த பாரம்பரிய உணவுகள், அப்பம், இடியாப்பம், மீன்கறி போன்றவை முக்கிய உணவுகள் ஆகும். கதகளி, மோகினி ஆட்டம் போன்றவை இம்மண்ணின் பாரம்பரிய நடனங்கள் ஆகும். விஷு, திருச்சூர் பூரம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பணப் பயிர்களான ரப்பர், தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு, தேங்காய் போன்றவற்றால் அதிக வருவாய் கிடைக்கிறது.
மேலும் சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டப்பட்டு பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கிறது. அதைவிட சிறப்பான செய்தி ஒன்று உண்டெனில் அது கல்வியில் சிறந்த மாநிலம் ஆகும். அதாவது கேரளா மக்கள் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். 100%முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது.
கேரளா அதன் தனித்துவமான இயற்கை அழகு, வளமான வரலாறு, சிறந்த கலாச்சாரம், ஆரோக்கியமான உணவு முறை மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றால் இந்தியாவிலும் உலகிலும் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது என்பதை பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.
உலகிலேயே "16வது சிறந்த சுற்றுலா இடம்" பிடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தை நாம் இன்னும் பார்க்காமல் இருக்கலாமா? ஏற்கனவே பார்த்து இருந்தாலும், இயற்கையை ரசிக்க எத்தனை முறை என்ற அளவு கட்டுப்பாடு அவசியமில்லை. இந்தியாவின் எழில் ராணியை காண நாம் அனைவரும் செல்வோம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச்
சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை
யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்
GOLD RATE:தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு... வெள்ளி கிராமிற்கு ரூ.4 குறைவு!
{{comments.comment}}