கொச்சி: கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதனால் மலையாளத் திரையுலகம் ஆடிப் போயுள்ளது.
மலையாள நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது நீதிபதி ஹேமா கமிட்டி கடுமையான புகார்களை முன்வைத்து வெளியிட்ட அறிக்கையால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. நடிகர் மோகன்லால் தலைமையில் செயல்பட்டு வந்த நடிகர் சங்கமான அம்மா சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. அத்தனை பேரும் ராஜினாமா செய்து விட்டனர்.

இந்த நிலையில் தற்போது கேரள மாநில அரசு குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளது. நடிகைகள் சிலர் கூறிய புகார்களின் பேரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 17 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
நடிகைகள் சோனியா மல்ஹார், மீனு முனீர், ரேவதி சம்பத் உள்ளிட்டோர் இதுவரை புகார் கூறியுள்ளனர். நடிகை சோனியா மல்ஹார், நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறியுள்ளார். அதேபோல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மீனு முனீர் புகார் கூறியுள்ளார்.
கக்கூஸுக்குப் போன நடிகையை கட்டிப்பிடித்த ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா குறித்து நடிகை மீனு முனீர் கூறுகையில், ஒரு படப்பிடிப்பின்போது எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்தது. படத்தின் இடைவெளியில் நான் டாய்லெட் போயிருந்தேன். போய் விட்டு வெளியே வந்த என்னை பின்னாலிருந்து கட்டிப்பிடித்த நடிகர் ஜெயசூர்யா, முத்தமும் இட்டார். என்னுடைய அனுமதியின்றி இவ்வாறு அவர் செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.
அதேபோல அம்மா சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து இடவேள பாபு தன்னிடம் உடல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் மீனு புகார் கூறியுள்ளார். இதேபோல நடிகர் முகேஷுடைய கோரிக்கைகளை தான் நிராகரித்ததால் தன்னை அம்மா சங்கத்தில் சேர விடாமல் தடுத்து வந்ததாக கூறியுள்ளார். முகேஷ் தற்போது ஆளும் இடதுசாரி கூட்டணியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா உள்ளிட்டோரும் பல்வேறு புகார்களைக் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}