வயநாடு: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து ஏற்கனவே கன மழை புரட்டி போட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்தது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்து அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக வயநாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 400 குடும்பங்கள் சிக்கி உள்ளன. இந்த நிலச்சரியில் சிக்கியவர்களில் இதுவரை இரண்டு குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ஒன்பது பேர் கொண்ட குழுக்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ராணுவமும் மீட்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்திலிருந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கேரளாவில் இன்று அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனிடம்,பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவு குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தனர் . இந்த நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தோருக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50000 நிவாரணத் தொகையும் வழங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}