சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுமார் 80 கோடியில் தயாரிக்கப்பட்ட படமான அயலான், வசூல் வேட்டையாடி வருவதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ரூ. 50 கோடியை அயலான் படம் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அயலான். சரத் கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் திரைக்கு வந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த இப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்காக இப்படத்தை காண பெற்றோர்களும் குடும்பம் குடும்பமாக திரையங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் படம் ஹிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலியனை மையமாக கொண்டு படத்தின் கரு அமைந்துள்ளது. யோகிபாபுவின் கலக்கல் காமெடியுடன் இப்படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஏலியன் + காமெடி இரண்டும் சேர்ந்து கதை உருவாகி இருப்பது சிறப்பு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கு பிடிக்கும் விதத்தில் அயலான் அமைத்துள்ளது. 5 வருடங்களாக இப்படம் உருவாகி வந்த நிலையில் ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் இப்படம் அமைந்திருக்கிறது என்று செல்லலாம்.
அயலான் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் இப்படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், அயலான் படம் 4 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. விடுமுறை காலம் என்பதால் அயலான் வசூல் மேலும் கூட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}