மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?

Dec 17, 2025,09:59 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


 20 25 டிசம்பர் மாதம் 17ஆம் தேதி புதன்கிழமை ஆன இன்று சிவபெருமானுக்குரிய பிரதோஷ விரதமும், முருகப்பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரமும் சேர்ந்து ஒரே நாளில் வருவது கூடுதல் சிறப்பு மிக்க நாளாக அமைந்துள்ளது. இந்த பிரதோஷ நாள் மார்கழி மாதத்தின் முதல் பிரதோஷம் மற்றும் இந்த வருடத்தின் கடைசி பிரதோஷம் நாளாகும். ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசி திதியில் பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபாடு செய்வதனால் செல்வ வளம் பெருகும்,பாவங்கள் நீங்கி,வாழ்க்கையில் அமைதியும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.


பிரதோஷ காலம்:




சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னும் பின்னும் உள்ள 1.5 மணி நேரமே பிரதோஷ காலமாகும்.இது மாலை4:30முதல் 6:00 மணி வரை அல்லது 7:00மணி வரை. இன்று மாலை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பிரதோஷ பூஜை யில் கலந்து கொள்வது சிறப்பு. சிவன் மற்றும் நந்தி பகவானை வழிபடுவதும், நந்திக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. சிலர் நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலை வழிபாட்டிற்கு பின்னரே விரதம் முடித்துக் கொள்வார்கள். இந்த நேரத்தில் சிவபெருமானை மனதார நினைத்து "ஓம் நமச்சிவாய "மந்திரத்தை ஜெபிப்பது அதீத நன்மைகளை தரும்.


பிரதோஷ நேரத்தில் பாட வேண்டிய சிவ மந்திரம்:


ஓம் சர்வாய தேவாய நம:

ஓம் பவாய தேவாய நம :

ஓம் ருத்ராய தேவாய நம :

ஓம் உக்ராய தேவாய நம :

ஓம் பீமாய தேவாய நம :

ஓம் பசுபதேர் தேவாய நம :

ஓம்  ஈசானஸ்ய  தேவாய நம :

ஓம்  மஹ தேர் தேவாய நம :


இந்த எட்டு மந்திரத்தையும் பிரதோஷ நேரத்தில் பாடுவதனால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.


வாழ்வில் உயர்வை கொடுக்கும் சிவ மந்திரம் :


"ஓம் தத்புருஷாய வித்மஹே 

மகாதேவாய தீமஹி! தன்னோ ருத்ர பிரசோத யாத்"


சிவபெருமானின் இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு அனைத்து மனக்கவலைகளும், துக்கங்களும் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.


பிரதோஷ தினத்தில் கூற வேண்டிய சிவன் மூல மந்திரம் :


"சிவ சிவ  என் கிலர்  தீவினையாளர் 

சிவ சிவ என்றிட தீவினை மாளும்

சிவ சிவ என்றிட தேவரும் ஆவார்

சிவ சிவ என்னச் சிவகதி  தானே "

-திருமூலர் திருமந்திரம்


இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறி வர அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீரும்.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!

news

மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்

news

Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?

news

சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!

news

ஆணுக்கு சமமாய் நானும் தான்!

news

The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!

news

கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!

news

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?

news

மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்