மனசு உடைஞ்சுடுச்சு... செல்ல நாயின் பிரிவை மறக்க முடியாமல் தவிக்கும் குஷ்பு

May 12, 2023,04:27 PM IST
சென்னை : இறந்து போன தனது நாயின் பிரிவை தாங்க முடியாமல் இருக்கும் துயரத்தை ட்விட்டரில், போட்டோ பதிவிட்டு பகிர்ந்துள்ளார் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு.

நடிகை குஷ்பு, தனது வீட்டில் வளர்ந்த இரண்டு செல்ல நாய்களில் ஒன்று இறந்து விட்டதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பதிவிட்டிருந்தார். அதில் அவர், 12 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் ஒருவராக இருந்தாய். உன் புரிதல், அளவில்லாத பாசம், சிரிப்பு உள்ளிட்ட குணங்கள் எங்களை கவர்ந்தது. உன் இழப்பால் நாங்கள் இதயம் நொறுங்கிவிட்டோம். நீ சாந்தியடைந்து விட்டாய் என நம்புகிறோம்.



உன்னை போன்று வேறு யாரும் இல்லை. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி இருந்தனர். குஷ்பு தனது செல்ல நாய்க்கு ஸ்நூப்பி சுந்தர் என வைத்து வளர்ந்து வந்தார். இந்த நாய் குஷ்புவிற்கு மிகவும் பிரியமானதாம்.

இந்நிலையில் ஸ்நூப்பி சுந்தருடன் தான் கொஞ்சி விளையாடிய போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்று ட்விட்டரில் பகிர்ந்து குஷ்பு, நீ எங்களை விட்டு பிரிந்து 3 வாரங்கள் ஆகி விட்டது. ஆனால் தினந்தோறும் நாங்கள் மிஸ் செய்கிறோம். நீ இல்லாமல் வீடே வெறிச்சோடிப்போய், வெறுமையாக உள்ளது. நீ சாந்தி அடைந்திருப்பாய் என நம்புகிறோம். அமைதி கொள்வாய் பேபி. நீ எப்போதும் என்னுடைய செல்ல பையன் தான் என தனது செல்ல நாயின் பிரிவை தாங்க முடியாமல் கருத்து பதிவிட்டுள்ளார்.

உடைந்த இதயம், கண்ணீருடன் இருக்கும் எமோஜியுடன் குஷ்பு பகிர்ந்திருக்கும் இந்த பதிவை பார்த்து விட்டு, இதற்கும் ரசிகர்கள் பலர்  அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்