நைனிடால்: உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் மலைச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கீர் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தராலி பகுதியில் பல கட்டிடங்களை காட்டாற்று வெள்ளதால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாக பெய்த பெரும் மழையால் வெள்ளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

நைனா என்ற கிராமத்தில் ஹனுமான் கோயில் அருகே பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டது. திகிலூட்டும் வகையிலான மண்சரிவின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த மண்சரிவில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் கூறுகையில், உத்தரகாசியின் தாராலியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த செய்தி கவலையையும் வேதனையையும் அளிக்கிறது. மீட்புப் பணிகளில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
உத்தராகண்டில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி இறந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார். உத்தர்காசி நிலைமை குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் கேட்டறிந்தேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஒருவருக்கும் உதவிகள் விடுபடாமல் இருக்கும்படி செயலாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் தேங்காயின் மருத்துவ மகத்துவம்!
சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!
100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!
அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!
மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
{{comments.comment}}