கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் அவரது அலுவலகத்திலேயே வைத்து இன்று சரமாரியாக சுடப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இலங்கையில் அண்மைக்காலமாகப் பெருகிவரும் கொலைச் சம்பவங்களில் ஒரு அரசியல்வாதியை இலக்குவைத்து நடந்த முதல் நிகழ்வு இதுவாகும்.
வெலிகம கடற்கரை நகர சபைத் தலைவராக இருந்தவர் லசந்த விக்கிரமசேகர (38). இவர் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்தவர். தனது அலுவலகத்தில் அமர்ந்து, தொகுதி மக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது, துப்பாக்கியை மறைத்து வைத்தபடி உள்ளே புகுந்த ஒரு நபர், லசந்தாவை நோக்கி பலமுறை சரமாரியாக சுட்டார். இதில் லசந்த ரத்த வெள்ளத்தில் மிதந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் போய் விட்டது.

லசந்தாவை சுட்ட பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எதற்காக இந்த விபரீதச் செயல் என்று தெரியவில்லை. போலீஸார் கொலையாளியைப் பிடிக்க நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் இந்த ஆண்டு வன்முறைக் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு அரசியல் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்து அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு நடந்த முதல் அரசியல்வாதியின் கொலை இதுவாகும்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}