மறுபடியும் வந்துட்டோம்...புதிய பட அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்

Sep 16, 2024,03:40 PM IST

சென்னை: லெஜெண்ட் சரவணா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர் ப்ரடக்ஷன் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக   தனது இரண்டாவது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் லெஜண்ட் சரவணன்


தொழில் அதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் தி லெஜண்ட்.  இப்படம் திரையரங்கங்கள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தொடங்கி, தற்போது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மற்றும் மும்பை,டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் படமாக்கப்பட உள்ளது. 




காக்கிச்சட்டை,கொடி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கி சமீபத்தில் சூரி நடிப்பில்,வெளிவந்த கருடன் திரைப்படத்தின் ,  இயக்குனரான ஆர்எஸ் துரை செந்தில்குமார் தனது அடுத்த படைப்பான லெஜெண்ட் சரவணா நடிக்கும் பெயரிடாத புதுப்படத்தை இயக்குகிறார். தேனியை மையமாகக் கொண்டு உருவாகிய கருடன் படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்சன் திரில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார். 


மேலும் புதுமையான கதை களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும்  இப்படத்தை தி லெஜெண்ட் நியூஸ் சரவணா ஸ்டோர் கலெக்ஷன் மிகப் பிரம்மாண்டமான  தயாரிக்க இருக்கிறது. பெயரிடதப்படாத இப்படத்தில் லெஜெண்ட் சரவணாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஷாம், ஆண்ட்ரியா, ஜெரமியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரபாகர், லியோ புகழ் பேபி இயல், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க எஸ் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் படத் தொகுப்பை கையாளுகிறார்.


முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படிப்படப்பிடிப்பு தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என படக் குழு தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்