அகிம்சை நிலைபெறட்டும்!

Apr 01, 2026,04:41 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


சிற்றுயிர்க்கும் சிறுதுயர் நேரா வகையில் 

வாழும் வழியைக் காட்டிய வள்ளல் பெருமானே!


எவ்வுயிர்க்கும் துன்பம் தரா அகிம்சையெனும் 

அருள்நெறி நிற்க அருளிய அருகப் பெருமானே!


அரச போகத்தில் அவதரித்தாலும் 

தூய மெய்ஞ்ஞானத்தால் 

அகிலத்திற்கு அன்பைப் போதித்த அருட்பெருமானே!


"ஆசை அறுக்க! பற்றுகள் விடுக! பேரின்பம் பெறுக!" என்றே 

உலகியல் வாழ்வில் உழலும் மக்களை 

உன்னத நிலைக்கு உயர்த்த வந்த உத்தமப் பெருமானே!




வாழ்வின் இன்ப துன்பம் அனைத்தும் கண்டே இருமை நீக்கி, 

இறைத்துவம் எனும் உண்மைதனை 

உலகறியச் செய்த உண்மைப் பெருமானே!


யுகத்தின் அழிவைத் தடுக்க 

இன்றைய நாட்களில் அவசியத் தேவை மற்றும் அவசரத் தேவையாக, 

அருகிப்போன அன்பை மீண்டும் பெருகச் செய்ய...


உறுதிகொள்வோம்.. கருகிய உயிர்களை இனி காணாதிருப்போமாக! 

அன்பைத் தழைக்கச் செய்வோம்! 

சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவத்தை மீட்டெடுப்போம்!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்