- க. யாஸ்மின் சிராஜூதீன்
பொங்கல் பண்டிகையின் நிறைவுநாள்...
கன்னிப் பொங்கல் அல்லது
கணுப்பண்டிகைநாள்....
மாபெரும்சந்திப்புநாள்!!! ஒற்றுமைநாள்!!!
உற்றார், உறவினர்,நண்பர்களைக் காணும்நாள்!
பெரும் பாக்கியமான பெரியோர் ஆசி பெறும்நாள்!
விளையாட்டுப்போட்டிகள்நிறைந்த நாள்
பட்டிமன்றம் பேச்சாற்றலை வளர்க்கும்
உறிஅடித்தல்திறமையை ஒளிரச்செய்யும்
வழுக்குமரம் விடாமுயற்சியை அளிக்கும்
பெண்களுக்கு சிறப்புமிக்கநாள்
சகோதரர்களின் நலன்காக்க நோன்புவைக்கும்நாள்
சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொத்து கட்டிய
பொங்கல் பானை அளித்து ஆசிபெறும்நாள்..

மஞ்சள் இழைத்து பாதம் மற்றும்
முகத்தில் பூசிக்கொள்ளும்நாள்..
நீர்நிலைகள் சென்று களிக்கும்நாள்
ஒற்றுமையை வலியுறுத்தும்நாள்..
பழையன கழிதல், புதியன புகுதல் நன்றி, உதவி, ஒற்றுமை ,பாசம்
பெரியோரை மதித்தல்.... வாழ்கைத்தத்துவம் நமக்குள் விதைக்கும்
பொங்கல் பண்டிகையை
என்றும் சிறப்பாய் கொண்டாடுவோம்
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே
காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே..
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் மகிழ்வுடன்...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
இனிமை சேர்ந்திடவே இதயமும் மகிழ்ந்திடவே.. காணும் பொங்கல்!
ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக
பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த தலைவர்: எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து!
ஜனவரியில் அரங்கேறிய வரலாறு.. மெட்ராஸ் மாகாணம் எப்படி தமிழ்நாடு ஆனது?
விழியில் விழி மோதி!
கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே .. உலகில் ஒற்றுமை தழைக்கவே!!!
{{comments.comment}}