சென்னை: சென்னையிலும், சென்னை புறநகர்களிலும், பிற மாவட்டங்களிலும் கன மழை நேரத்தில் இரவு பகலாக விடிய விடிய பணியாற்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களைக் காக்க அரும்பாடுபட்டவர்களில் தூய்மைப் பணியாளர்களுக்குத்தான் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட எல்லைச் சாமிகள் போல இருந்து மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
மழைக்காலம் வந்து விட்டாலே, அதிலும் பெரு மழைக்காலங்களில் மக்களுக்கு பெரும் சிரமம்தான். மழை நீர் வடியாமல் தேங்கிக் கொள்வதால் ஏற்படும் வெள்ளத்தால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ஒவ்வொரு மழைக்கும் திக்கித் திணறும் நிலைதான் உள்ளது. இதற்குக் காரணம், சென்னையின் நிலப்பரப்பு தட்டையாக உள்ளது. எனவே தண்ணீர் தேங்கி நிற்கத்தான் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வடியும். அதை வேகமாக வடிய வைக்கும் முயற்சிகளில்தான் அரசும், அதிகாரிகளும், ஊழியர்களும் மெனக்கெடுகிறார்கள். இந்த இடத்தில்தான் தூய்மைப் பணியாளர்களின் அரும் செயல்கள் வந்து நிற்கின்றன.
சென்னை முழுவதும் உள்ள மழை நீர் வடிகால்களில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, எங்காவது அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வது, தெருக்களில், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றால் அதை வெளியேற்றத் தேவையான பணிகளைச் செய்வது, சாக்கடைகள் எங்காவது அடைத்துக் கொண்டால் அதை சரி செய்வது என்று இவர்களுக்குத்தான் அதிக அளவில் வேலைகள் இருக்கும். ஆனால் சென்னை செய்த புண்ணியமோ என்னவோ பெருமழைக்காலங்களில் நமது தூய்மைப் பணியாளர்கள் தீயாக வேலை செய்வது இயல்பான ஒரு விஷயம். இரவு பகல் பாராமல் மழையில் நனைவதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் செய்யும் செயல்கள் மிகப் பெரிய சேவை.

சரியான ரெயின் கோட் கூட இல்லாமல் பலர் வேலை செய்வதை பார்க்க முடியும். மழை கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால் மறுபக்கம் இவர்கள் ஏதாவது கால்வாயில் உள்ள அடைப்பை சரி செய்து கொண்டிருப்பார்கள். கடந்த சில நாட்களாக நமது தூய்மைப் பணியாளர்களம், மாநகராட்சி ஊழியர்களும் சேர்ந்து செய்த பணியின் காரணமாகத்தான் சென்னையின் பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. தேங்கிய தண்ணீரும் கூட வேகமாக வடிய இவர்களது செயல்களும் ஒரு முக்கியக் காரணம்.
அத்தோடு நில்லாமல் வீதி வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கும் செயல்களில் ஈடுபடுவோரும் கூட மழையைப் பொருட்படுத்தாமல் நனைந்தபடிதான் வருகிறார்கள். இவர்களது உழைப்புக்கு மிகப் பெரிய வணக்கம் வைக்க வேண்டும்.

எப்போதுமே உயர் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் முதல் பாராட்டு வந்து சேரும். கடைசி நிலையில் இருப்பவர்களுக்கு அந்தப் பாராட்டும், அங்கீகாரமும் கடைசியில்தான் வந்து சேரும்.. சில நேரம் வரவும் செய்யாது. ஆனால் உண்மையில் முதல் மரியாத செய்யப்பட வேண்டியவர்கள்தான். மக்கள் நிம்மதியாக தூங்க, இரவு முழுவதும் உட்கார்ந்து தண்ணீரை பம்ப் செய்து வெளியேற்றும் அந்த நல்லாத்மாக்களை எத்தனை பாராட்டினாலும் போதாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தூய்மைப் பணியாளர்களையும் தனது ஆய்வின்போது சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய பணியைப் பாராட்டினார். அவர்களுடன் சேர்ந்து டீ குடித்தார். பிஸ்கட் பாக்கெட்களையும் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இப்படிப்பட்ட சின்ன சின்ன பாராட்டுகளும், ஊக்குவிப்புகளும்தான் ஒருவரை சிறப்பாக செயல்பட வைக்கும். தூய்மைப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பிற ஊழியர்கள், மேயர் பிரியா என அனைத்துத் தரப்பினரும் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியதே.
இடர் காலங்களில் மக்களுக்கு எந்த தொல்லையும், சங்கடமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள இப்படி விடிய விடிய, இரவு பகலாக வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள்.. எல்லையில் நம்மைக் காக்கும் அந்த ராணுவ வீரர்களுக்கு சமம்.. அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் வைப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}