விண்ணுலக ஆப்பிள் பற்றித் தெரியுமா உங்களுக்கு.. தெரியாதா.. அட வாங்க பாஸ் தெரிஞ்சுக்கலாம்!

Feb 15, 2025,05:39 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஹாய் ஹலோ வணக்கம்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க.. இன்னிக்கு நாம குட்டீஸ்களா மாறப் போறோம்.. ஆமாங்க, LAL TAMATAR BADE MAJEDAR என்கிற ஹிந்தி நர்சரி பாடல் வரிகளுக்கு ஏற்ப டொமேட்டோ என்னும் தக்காளியை பற்றிய தகவல்களைப் பார்க்கப் போறோம்.. ரெடியா!


தக்காளி என்றாலே..  Love Apple, Tomato விண்ணுலக ஆப்பிள் என்று பல செல்லப் பெயர்களில் அதை அழைக்கிறோம். தக்காளி நம் அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் முதன்மையானது ஆங்கிலத்தில் தக்காளிக்கு லவ் ஆப்பிள் என்ற பெயர் உண்டு. அதற்கான பொருள் தமிழில் 'கலப்பின தக்காளி' அல்லது 'சீமை தக்காளி' என்பது ஆகும்.


தக்காளி, சமையலில் நாம் தினமும் காயாகவும், பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறி செடி இனமாகும். குடைமிளகாய் கத்தரிக்காய் போன்றே இது சோலானேசியா அல்லது நிழல் சேர் (Night shade) செடி குடும்பத்தைச் சேர்ந்த செடியினம்.


தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது தக்காளி. பிரெஞ்சுகாரர்கள் அயல்நாட்டு தக்காளிக்கு பாலுணர்வை உண்டாக்கும் சக்திகள் இருக்கிறது என நம்பினார் இதனால் தக்காளியை போம்மேடி அமோர் (pomme d'amour') அல்லது லவ் ஆப்பிள் (LOVE APPLE) என்று அழைத்தனர். 'LOVE APPLE' என்று தக்காளியை அழைக்க இதுதான் காரணம்


தக்காளி பற்றிய வரலாறு




தக்காளியை கண்டுபிடித்தவர்கள் ஸ்பானியர்கள். இதனை உணவுப் பொருளாக ஏற்றது முதன் முதலில் இவர்கள்தான். போர்த்துக்கீசிய பண்டம் என்றும் காதல் ஆப்பிள் என்றும் பிரெஞ்சு நாட்டினர் சிறப்பித்துக் கூறுவர். விண்ணுலக ஆப்பிள் என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.


பெரும்பாலும் வருடாந்திர வளரும் செடி கொடி வகையை சார்ந்த தக்காளி சொலானம் லைக்கோ பெர்சிகம் இனத்தைச் சார்ந்தது. வெஜிடபிள் சாலட் களிலும் அன்றாடம் செய்யும் சட்னி குழம்பு, சாம்பார் வகைகளில் இன்றியமையாத இடம் பிடிக்கும் தக்காளியை கட் செய்து அப்படியே சாப்பிடுவதால் அதீத நன்மை பெறலாம் .உடல் பலவீனமாக இருப்பதற்கு இது ஒரு சிறந்த புத்துணர்ச்சி டானிக்.


தக்காளி பயன்பாடுகள்:


தக்காளி ரசம் விரும்பாதவர்கள் யாரேனும் உண்டோ? குழந்தை முதல் பெரியவர் வரை என்ன உணவு சாப்பிட்டாலும் சிறிது ரசம் சாதம் இருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும். குழந்தைகளுக்கு நல்ல ஜீரண சக்தியும், வளர்ச்சியும், வலிமையும் உண்டாக்கும் இந்த தக்காளி.


தக்காளி பயன்கள்:


தக்காளியில் புரதம், கால்சியம் ,நார்ச்சத்து, அயன் ,மெக்னீசியம், சோடியம் ,செம்பு ,பீட்டா கரோட்டின், காமக்கரோட்டின், பொட்டாசியம் ,பாஸ்பரஸ், போலிக் அமிலம், வைட்டமின் ஏ ,பி 12 வைட்டமின் சி மற்றும் p6 அதிகம் உள்ளது. நரம்புகளுக்கு எலும்புகளுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.


நம் உடம்பில் சரும சுருக்கம் வரவிடாமல் இளமை பொலிவுடன் திகழ தக்காளி துணை புரிகிறது. இருதய நோயாளிகளுக்கு அருமருந்து .சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.


குடல் பகுதியை சுத்தம் செய்யவும், மூளை உழைப்பு நிறைய உள்ளவர்கள், சதைப்பிடிப்பற்றவர்களும் இந்த தக்காளிப் பழத்தை  உபயோகித்து பயன் பெறலாம் .


மேலும் சுவையான சுவாரசியமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்