வயநாடு.. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின்.. கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி!

Aug 13, 2024,01:05 PM IST

திருவனந்தபுரம்:   வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.


வயநாட்டில் கடந்த ஜூலை மாத இறுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. இந்த 3 கிராமங்களும் மண்ணுக்குள் புதைந்தன. இந்த நிலச்சரிவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420யை கடந்துள்ளது.  273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை. தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பலரின் உடல் உறுப்புகள் மட்டும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட 1900த்திற்கும் மேற்பட்டவர்கள் 16 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




நிலச்சரிவில் சிக்கி உறவினர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் முகாம்களில் உள்ளவர்களை மறுவாழ்வுக்காக வாடகை வீடுகளில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வயநாடு நிலச் சரிவில் இதுவரை காணாமல் போனவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏராளமானோர் நிவாரண உதவிகளை வாரி வழங்கி வருகின்றனர்.


வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், உடமைகள் மற்றும் வீடுகளை இழந்து தவிப்பவர்கள், உயிர் பிழைத்தவர்கள் என அனைத்து தரப்பினர்களின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய உள்ளதாக கேரளா வங்கியின் சூரல்மாலா கிளையில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 29 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிகிறது. தள்ளுபடி செய்ய உள்ள தொகை குறித்து இன்னும் அந்த வங்கி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இந்த கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்துடன் வங்கி ஊழியர்களும் தாமாக முன் வந்து  தங்களுடைய 5 நாட்கள் சம்பளத்தை முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!

news

தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!

news

பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்