சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக குழு பேச்சு நடத்தியது.
திமுக கூட்டணியில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. முதலில் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 9 சீட்டுகளைக் கொடுத்தது. அதில் தேனியில் தோற்றும், மற்ற 8 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த முறை கூடுதல் இடங்களை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருப்பினும் திமுக எத்தனை தரும் என்று தெரியவில்லை. அதேசமயம், சமீபத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்ததாக இரு கட்சிகளுமே திருப்திகரமாக தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று திமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த தேர்தலில் திருப்பூர் மற்றும் நாகப்பட்டனம் (தனி) ஆகிய இரு தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் திருப்பூரில் கே.சுப்பராயன், நாகப்பட்டனத்தில் எம். செல்வராசு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த முறையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று மாலை இரு கட்சிகளுக்கும் இடையே அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் முதல் கட்ட பேச்சுக்கள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் கூறுகையில், கடந்த தேர்தலில் போட்டியிட்டதை விட கூடுதல் தொகுதிகளைக் கேட்டுள்ளோம். பட்டியலும் கொடுத்துள்ளோம். முதல்வர் வெளிநாட்டிலிருந்து 7ம் தேதி திரும்புகிறார். அதன் பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இன்றைய பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்றனர்.
இன்றைய பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, எம்.பி. சுப்பராயன் உள்ளிட்டோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவும் கலந்து கொண்டது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}