சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பொது விடுமுறை வழங்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில்,
வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் தேதி குறிச்சாச்சு. இதற்காக தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 483 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மார்ச் 27 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து இந்த மனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல்களமே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. லோக்சபா தேர்தல் நடைபெறும் (ஏப்ரல் 19) நாளன்று பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று ஊழியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ன்று தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறி எந்த அசம்பாவிதமும் செய்யாமல், ஜனநாயக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், இதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}