போபால்: மூத்த தலைவரும், தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானின் மீண்டும் முதல்வராகும் கனவு தகர்ந்துள்ளது. புதிய முதல்வராக மோகன் யாதவை பாஜக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேச பாஜகவில் முக்கியத் தலைவராக வலம் வந்தவர் சிவராஜ் சிங் சவுகான். 4 முறை அங்கு முதல்வராக இருந்துள்ளார். தொடர்ந்து அவரே முதல்வராக இருந்து வந்த நிலையில் தற்போது அங்கு முதல்வரை மாற்றியுள்ளது பாஜக.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு மீண்டும் சவுகானே போட்டியிட்டார். ஆனால் அவருக்கு கட்சிக்குள் கடும் போட்டி காணப்பட்டது. கட்சித் தலைமையும் கூட புதிய தலைமுறைக்கு முதல்வர் பதவியைத் தர விரும்பியது. ஆனால் சவுகான் போட்டியிலிருந்து விலகாததால் இழுபறி நிலை நிலவியது.

இந்த நிலையில் இன்று போபாலில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுகான் ஆட்சியில் அவர் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். உஜ்ஜைனி தொகுதியிலிருந்து 3 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோகன் யாதவ்.
மோகன் யாதவ் தேர்வைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. அடுத்து ராஜஸ்தான் மாநில முதல்வரை மட்டும் பாஜக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நேற்றுதான் சத்திஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான இழுபறி முடிவுக்கு வந்தது என்பது நினைவிருக்கலாம்.
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்... எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது... சிடிஆர் நிர்மல்
ICC ODI ranking: ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில்.. ரோஹித் சர்மா புதிய சாதனை!
வைரலானது.. ஜப்பானின் முதல் பெண் பிரதமரின் கைப்பை.. உள்ளூர் நிறுவனத்திற்கு கிராக்கி!
{{comments.comment}}