மதுரை: மதுரை திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி கோவில் 90 வது பிரியாணி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த பிரியாணி திருவிழா ஆண்டுதோறும் ஒவ்வொரு தை மாதம் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் செய்யப்பட்டு, பிறகு சனிக்கிழமை காலை கிடா வெட்டி பிரியாணி சமைத்து மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்படுவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமல்ல அது திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆடு கோழி என தங்கள் நேத்தி கடன்களை செலுத்துவது வழக்கம். அந்த வரிசையில் இந்த வருடம் வழக்கம்போல் 90 ஆவது பிரியாணி திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேற்று பூ பழம் தேங்காய் வாழைப்பழம் கொண்ட தட்டுகளை தலையில் சுமந்தபடியே ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தனர். கோயில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாடைந்தனர்.
அதேபோல் நினைத்தது நிறைவேறிய பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.அப்போது சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த விழாவின் இறுதியில் 300 ஆடுகள் மற்றும் 150 கோழிகள் கொண்டு 3000 கிலோ அரிசியில் கமகமவென தயாரிக்கப்பட்ட அசைவ பிரியாணி இன்று காலை முனியாண்டி சாமிக்கு படையிலிடப்பட்டது. இதனை தொடர்ந்து படையலிடப்பட்ட பிரியாணி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வடக்கம்பட்டி பிரியாணி கடை அல்லது முனியாண்டி விலாஸ் என்ற பெயரிலான கடைகளை நடத்துவோர் இந்தக் கோவிலுக்கு வந்து நேர்ந்து விட்டுத்தான் அந்தக் கடையை ஆரம்பித்து நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}