பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ம் தேதியான இன்று துவங்கி உள்ளது. இதில் கலந்து கொண்டு புனிதநீராட லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பாரம்பரிய விழாவாகவும், அதிகமான மக்கள் ஒன்று கூடும் விழாக்களில் ஒன்றாகவும் இருப்பது மகா கும்பமேளா. ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைனி, அலகாபாத் ஆகிய நான்கு இடங்களில் நான்கு வகையான கும்பமேளாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறவதை பூர்ண கும்பமேளா என்பார்கள். ஆனால் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவை மகாகும்பமேளா என்பார்கள். அப்படி 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் இன்று துவங்கி உள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை சொத்தம் 41 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற உள்ளது. அதாவது மகர சங்கராந்தி அன்று துவங்கி, மகா சிவராத்திரி வரை இந்த விழா நடைபெறும். இதில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகின் பல பகுதிகளில் இருந்தும் துறவிகள், அகோரிகள், சன்னியாசிகள் பிரயாக்ராஜில் குவிந்தள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பிற்காக உத்திர பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
மகாகும்ப மேளாவிற்கு வருபவர்களை கவருவதற்காக இதன் நுழைவு வாயிலேயே 635 அடி அகலம், 54 அடி உயரத்திற்கு 12 ஜோதிர்லிங்கங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மகாகும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் லேசர் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. மகா கும்பமேளாவின் துவக்க விழா ஜனவரி 12 ம் தேதியான நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்ற கங்கா ஆரத்தி நிகழ்த்தி நடைபெற்றது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}