பிரயாக்ராஜ் : உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஏராரமானோர் காயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
தை அமாவாசையான இன்று அதிகாலை 2 மணி முதலே லட்சக்கணக்கானவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட குவிந்துள்ளனர். இதில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு பலரும் புனித நீராட சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதும், இது போல் பல உயிர்கள் பலி ஆவதும் ஒன்றும் புதியது கிடையாது என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பும் பலமுறை இது போல் நடந்துள்ளதாக வரலாறு சொல்கிறது. இன்று நேற்றல்ல, 1954 முதலே இது போல் பல கூட்ட நெரிசல் சம்பவங்களை பிரயாக்ராஜ் பார்த்துள்ளது.
கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவங்கள் :

1954 :
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற முதல் கும்பமேளா 1954ம் ஆண்டு, பிப்ரவரி 03ம் தேதி நடைபெற்றது. இதில் அப்போதைய அலகாபாத் நகரில் (தற்போதைய பிரயாக்ராஜ்) தை அமாவாசையில் புனித நீராட பலரும் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் கிட்டதட்ட 800 பேர் உயிரிழந்தனர்.
1986 :
ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் கிட்டதட்ட 200 பேர் உயிரிழந்தனர். அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த வீர் பகதூர் சிங், மற்ற மாநில முதல்வர்கள், எம்.பி., ஆகியோருடன் புனித நீராட வந்ததால், சாமானிய பக்தர்கள் புனித நீராட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
2003 :
கும்பமேளாவின் போது மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் கோதாவரி ஆற்றில் புனித நீராட ஏராரமான பக்தர்கள் குவிந்ததால் 39 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
2013 :
உத்திர பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவின் போது 42 பேர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர். கும்பமேளாவிற்கு வந்தவர்கள் அலகாபாத் ரயில் நிலையத்தில் ரயிலை பிடிப்பதற்காக நடைபாதை பாலத்தில் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
2025 :
பிரயாக்ராஜில் ஆற்றில் இருந்து 12 கி.மீ., தூரத்திற்கு தடுப்புகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் அதிக அளவிலான மக்கள் ஒரே நேரத்தில் புனித நீராட அதிகாலை 2 மணி அளவில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?
அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு
{{comments.comment}}