டெல்லி: மகாராஷ்டிராவில் பாஜக - ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சி மீண்டும் அமைகிறது. அங்கு பெரும்பான்மைக்கும் மேலான இடங்களில் இக்கூட்டணி வெற்றியை ஈட்டியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கருத்துக் கணிப்புகளை முறியடித்து அங்கு ஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிர மாநில சட்டசபைகளுக்கும், 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், பல்வேறு சட்டசபைத் தொகுதிகளுக்கும் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே பாஜக - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. ஆனால் பின்னர் ஜேஎம்எம் கூட்டணியின் கை ஓங்கி விட்டது. தற்போது பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் அக்கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியையும் தக்க வைக்கிறது. ஜார்க்கண்ட சட்டசபையில் 81 தொகுதிகள் உள்ளன
மகாராஷ்டிராவில் ஆரம்பத்தில் நெக் அன் நெக் ஆக போட்டி காணப்பட்டது. ஆனால் பின்னர் அதிரடியாக பாஜக முன்னணிக்கு வந்து விட்டது. தனிப்பெரும் கட்சியாகவும் பாஜக உருவெடுத்துள்ளது. அக்கூட்டணி மீண்டும் அங்கு ஆட்சியமைக்கிறது. பாஜக கூட்டணியில் இடம் பெற்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன. யார் அடுத்த முதல்வர் என்ற போட்டி தற்போது அங்கு விறுவிறுப்படைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராவாரா அல்லது பாஜக அப்பதவியை தானே எடுத்துக் கொள்ளுமா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. சிவசேனாவிடமிருந்து முதல்வர் பதவியைப் பறித்தால் ஆட்சியமைப்பதில் சிக்கல் வரலாம் என்றும் பாஜக அஞ்சுகிறது. எனவே அடுத்த முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அங்கு கடும் போட்டி கிளம்பியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மீண்டும் ஹேமந்த் சோரனே முதல்வராகப் பதவியேற்பார். அதில் எந்த சிக்கலும் இல்லை. அங்கு ஆட்சியை தக்க வைத்து அசத்தியுள்ளார் ஹேமந்த் சோரன்.
காங்கிரஸ் இளம் தலைவர் பிரியங்கா காந்தி போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}