லக்னோ: அதிக வயதில் ஆட்ட நாயகன் விருதை மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார்.
லக்னோவில் நேற்று நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் மோதின.முதலில் பேட்டிங் செய்தது லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பன்ட் 63 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர் சொதப்பிய போதும், ஷிவம் துபே மற்றும் கேப்டன் எம்.எஸ். தோனி சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட சென்னை அணி, தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.
சேஸிங்கில் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 2 ரன்களை எடுத்து போட்டியை முடித்துக் கொடுத்த தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தோனி 2100 நாட்களுக்குப் பிறகு ஐபிஎல்இல் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2019இல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார் தோனி.
ஐபிஎல் தொடரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோனிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 43 வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவராக மகேந்திர சிங் தோனி திகழ்கிறார். இதற்கு முன்னர் ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிரவீன் தாம்பே, ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட், கிரிஸ் கெய்ல், ராகுல் டிராவிட் ஆகியோர்களை விட அதிக வயதில் தோனி ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். இது தோனி ரசிகர்களிடையே மிகுந்த உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஹைதராபாத் அருகே.. மருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலி எண்ணிக்கை 32 ஆனது!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
அழகான அரேகா பனை (Areca palm).. பாசிட்டிவிட்டி பரப்பும்.. ஆரோக்கியத்துக்கும் நல்லது!
டெல்லியா நீங்க.. வச்சிருக்கிறது பழைய வண்டியா.. அப்படீன்னா உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 01, 2025... இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?
என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!
PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு
கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!
{{comments.comment}}