சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் கே.ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகப் போவதாக ஒரு செய்தியும், அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆர்.அஸ்வின் விலகப் போவதாக இன்னொரு செய்தியும் உலா வருகிறது. இவை எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த், சஞ்சு சாம்சனை எம்.எஸ். தோனிக்கு சரியான மாற்றாக கூறுகிரார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலான சீக்கி சீக்காவில் அவர் கூறுகையில், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சஞ்சு ஒரு சிறந்த வீரர், மேலும் அவர் சென்னையில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு சென்னையில் ஒரு நல்ல பிராண்ட் மதிப்பு உள்ளது. அவர் ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகி சென்னைக்கு வர விரும்பினால், நான் அவரைத்தான் கேப்டனாக முதலில் தேர்வு செய்வேன்.

தோனி அதிகபட்சமாக இந்த சீசனில் விளையாடலாம், அடுத்த ஆண்டு இல்லை, எனவே தோனிக்குப் பதிலாக சஞ்சு சரியான மாற்றாக இருப்பார், இந்த மாற்றம் சீராக இருக்கும். அதேசமயம், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால், அவரை அதில் தொடர்ந்து செயல்பட வேண்டும். பாதியில் மாற்றக் கூடாது என்றார் ஸ்ரீகாந்த்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருக்கிறார் தோனி. வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்திருக்கிறார். அவரது தலைமையில்தான் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது அதிக ரன் எடுத்த வீரராகவும் திகழ்கிறார். 278 போட்டிகளில் 38.30 சராசரியுடன் 5439 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. இதில் 24 அரை சதங்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 137 க்கு மேல் உள்ளது.
ஐந்து ஐபிஎல் பட்டங்கள் தவிர, அவர் சிஎஸ்கேவுடன் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றுள்ளார். இதனால், தோனியின் புகழ் மற்றும் பிராண்ட் மதிப்பு காரணமாகவே இந்த அணி விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் கூட்டம் அவரைப் பின்தொடர்கிறது, மேலும் பல்வேறு ரசிகர் மன்றங்கள் ஒரே குரலில் 'தோனி' 'தோனி' என்று கோஷமிடுகின்றன.
அவர் சமீபகாலமாக விக்கெட் கீப்பிங்கில் அசத்தி வருகிறார். இந்த ஆண்டு சீசனில் சில நல்ல ஸ்கோரையும் அவர் எடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் தோனிக்குப் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் கண்டெடுத்த ருதுராஜ் கெய்க்வாட், இன்னும் வெற்றிகரமான கேப்டனாக உருமாறவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}