மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்.. மாரடைப்பு.. சோட்டானிக்கரை ஹோட்டலில் பரபரப்பு!

Aug 02, 2025,10:33 AM IST

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம் அடைந்தார். அவர் ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக சோட்டாணிக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு அவர் இறந்து கிடந்தார். 


வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ் (51) மரணம் அடைந்தது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் சோட்டாணிக்கரையில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தார். வெள்ளிக்கிழமை மாலை அவர் இறந்து கிடந்ததை போலீசார் உறுதி செய்தனர். அவர் ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக அங்கு தங்கியிருந்தார்.




கலாபவன் நவாஸ் மயங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். மேலும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. .


கலாபவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். தற்போது அவரது உடல் சோட்டாணிக்கரையில் உள்ள SD டாடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


கலாபவன் நவாஸ் "பிரகம்பனம்" என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வந்தார். அதற்காகத்தான் அவர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை அவர் ஹோட்டலை காலி செய்ய வேண்டிய நாள். ஆனால், அவர் காலி செய்யவில்லை. மேலும், வரவேற்பறையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளையும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.


கேரள முதல்வர் பினராயி விஜயன் கலாபவன் நவாஸின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  கலாபவன் நவாஸ், மிமிக்ரி மூலம் திரைப்படத் துறையில் நுழைந்தார். தொலைக்காட்சி தொடர்கள் மூலம் குடும்ப பார்வையாளர்களின் அன்பை வென்றார் என்று முதல்வர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.


கலாபவன் நவாஸ் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். "Mimics Action 500 (1995)", "Hitler Brothers (1997)", "Junior Mandrake (1997)", "Mattupetti Machan and Amma Ammaayiyamma (1998)", "Chandamama (1999)", மற்றும் "Thillana Thillana (2003)" போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!

news

இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!

news

இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!

news

எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!

news

விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!

news

நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்