கோலாலம்பூர்: இந்தியாவிலிருந்து மலேசியா செல்ல விரும்பும் இந்தியர்கள் இனிமேல் விசா இல்லாமல் அங்கு சுற்றுலா செல்லலாம் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்குத் திட்டமிடுவோர் இனிமேல் விசா இல்லாமலேயே அங்கு சென்று வர முடியும். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுக்கும் இந்த சலுகையை அறிவித்துள்ளது மலேசியா. இந்தத் தகவலை பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். மலேசியா பல்வேறு நாட்டவர்களால் விரும்பப்படும் ஒரு சுற்றுலா நாடாகும். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்தகு. இதில் சீனாவிலிருந்து வந்தோர் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஆவர். இந்தியர்கள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஆவர்.
இதுவே கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து 10 லட்சம் பேரும், இந்தியாவிலிருந்து நான்கு லட்சம் பேரும் வந்திருந்தனர். கொரோனா காலத்திற்குப் பின்னர் இது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை மலேசியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே மலேசியாவின் பக்கத்து நாடான தாய்லாந்து இந்த சலுகையை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இப்போது மலேசியாவும் இதில் இணைந்துள்ளது. இதனால் இந்த நாடுகளுக்கு சீனா, இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}