சென்னை: மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருக்கலாம். நானும் அதை குடித்து இறந்து போயிருப்பேன் என தெரிவித்திருந்தார்.
தன்னை துரோகி என கூறியதற்காக நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, கருப்பு சட்டை அணிந்தும், யார் துரோகி? என்று எழுதிய அடையாள அட்டையுடன் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதா் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}