விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு வந்த நபரை பரிசோதித்த போலீஸார் அவர் செய்த செயலைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர்.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைவு. இதனால் புதுச்சேரி பகுதிகளை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூர், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஒரு சிலர் மது பாட்டில்களை கடத்தி வருவதை வழக்கமாகக் செயல்படுத்தி வருகின்றனர். அதே சமயத்தில் அப்படி கொண்டு வரப்படும் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் போதைப் பொருள்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசாருக்கு தெரியாமல் விதவிதமாக வழிகளில் கடத்தல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஆசாமி ஒருவர் மது பாட்டில்களை வித்தியாசமாக கடத்தியுள்ளார். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நாகமணி என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சோதனை நடத்தப்பட்ட போது அவர் செய்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டனர் போலீஸார்.
நாகமணி, தனது முதுகு, வயிறு, இடுப்பு,தொடை, கால் என உடலின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 120 மதுபானங்களை செல்லோ டேப் போட்டு வளைத்து வளைத்துக் கட்டியிருந்தார். ஒரு பாட்டில் கூட உடையாமல் எப்படி இப்படி கடத்தி வந்தார் என்று போலீஸாரே ஆச்சரியமாகி விட்டனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதே போல சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், இருவர் டூவீலரில் வேகமாக வந்த போது வண்டி குலுங்கும் சத்தம் வித்தியாசமாக கேட்கவே வண்டியை நிறுத்தி சோதனை செய்யும்போது பெட்ரோல் டேங்கிற்குள் மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
ஓமவள்ளி தெரியுமா இந்த ஓமவள்ளி.. அதாங்க கற்பூரவள்ளி.. குட்டீஸ் முதல் பெரியவர் வரை.. சூப்பர் மருந்து!
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானை விட்டு வரக் கூடாது.. இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாரியம் அதிரடி உத்தரவு
இந்தியா முழுக்க.. 8 இடங்களில் குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த சதிகாரர்கள்.. பரபர தகவல்
டெல்லி சம்பவம்...வெடி பொருள் நிரம்பிய 2வது கார் எங்கே? தீவிரமாகும் தேடுதல் வேட்டை
டில்லி தாக்குதல் பின்னணியில் நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்
SIR.. வாங்கிய படிவங்களை நிரப்பத் தெரியாமல்.. விழிக்கும் மக்கள்.. திரும்பப் பெறுவதில் குழப்பம்
அறிவு மற்றும் உள்ளுணர்வு (உடல் மற்றும் உள்ளம் .. Intellect, Instinct and Intuition)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 13, 2025... இன்று பணம் கைக்கு வரப் போகும் ராசிகள்
{{comments.comment}}