டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக 10 வருடங்கள் பதவி வகித்தவர் டாக்டர் மன்மோகன் சிங். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு இந்தியாவில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்து மதத்தை சேராத முதல் சீக்கிய பிரதமராக பதவியேற்றவர் மன்மோகன் சிங் என்ற பெருமையையும் பெற்றவர்.
மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை வகுத்து சிறந்த ஆட்சி புரிந்த மன்மோகன் சிங் நேற்று வயது மூப்பின் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையை அவரது உடல் நிலையால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதால் இயற்கை எய்தினார் மன்மோகன் சிங்.
மன்மோகன் சிங் மறைவுக்கு அனைத்துக் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது வீட்டில் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது இறுதிச் சடங்கு நாளை அதாவது சனிக்கிழமை டிசம்பர் 28ஆம் தேதி ராஜ்காட் அருகே நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மத்திய அரசு நாடு முழுவதும் 7 நாட்கள் துக்க அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பிலும் ஏழு நாட்கள் துக்க அனுசரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்திலும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு இன்று ஒரு நாள் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார் .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}