ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை.. ராகுல் காந்தி, மு.க ஸ்டாலின் உள்ளிட்ட.. தலைவர்கள் பாராட்டு,வாழ்த்து..!

May 07, 2025,10:36 AM IST

டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை எதிர்த்து இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில்,ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியலைக் கட்சியை சார்ந்த தலைவர்கள் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.


கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவ வீரர்கள் போன்று உடை அணிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனையடுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியா முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தல்கள் முன் வைக்கப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பஹல்காம் தாக்குதலை கண்டித்து, இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில்,போர்க்கால ஒத்திகை நடைபெற இருப்பதாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும்  பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.குறிப்பாக கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.


மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மத்திய அரசு இன்று காலை 10 மணி அளவில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து பேச இருப்பதாக கூறியுள்ளது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் சூழ்நிலை உருவாகியுள்ளது.


அதே சமயத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லை மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலையைக் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.மேலும் எந்தவொரு சூழலையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் காஷ்மீரின் ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது .


இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் முழு ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.  இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.அதில்


எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: 




இந்திய ராணுவத்தை நினைத்தால் பெருமையாக உள்ளது. "ஜெய்ஹிந்த்" என பதிவிட்டுள்ளார்.


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்: 





தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு துணை நிற்கிறது. தேச நலன் கருதி நமது நாட்டிற்காகவும் ராணுவத்திற்காகவும் தமிழ்நாடு என்றும் துணை நிற்கும்.


இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்:

உலகம் பயங்கரவாதத்தைக் கண்டிப்பாகச் சகித்துக் கொள்ள கூடாது என ட்வீட் செய்துள்ளார்.


மஜ்லீஸ் கட்சியின் அசாதுதீன் ஓவைசி:

 நமது இராணுவ படைகள் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல்களை வரவேற்கிறேன். மீண்டும் ஒரு பஹல்காம் சம்பவம் நடக்காதவாறு பாகிஸ்தானுக்கு கடுமையான பாடம் புகட்ட வேண்டும். பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். ஜெய்ஹிந்த்!


இதே போல் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதல் முதல்வர்களும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தங்களின் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... சொன்னீங்களே செஞ்சீங்களா ?: நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

ஒரே மேடையில் அண்ணாமலை- இபிஎஸ்: எனது சகோதரர் அண்ணாமலை-இபிஎஸ்!

news

என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

news

இந்தியப் பொருளாதாரம் 6.8% வரை உயரும்.. பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

news

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் இடியை இறக்கிய வாஷிங்டன் கோர்ட்.. வரி விதிப்பு செல்லாது!

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு!

news

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...ஆர்சிபி அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30, 2025... வெற்றி இவங்க பக்கம் தான்

news

புதிய வாக்காளர்கள் திமுக பக்கம்...திமுக.,வின் வெற்றி நிச்சயம்...மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்