மார்கழி 29 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9 : விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

Jan 13, 2025,10:23 AM IST

- ஸ்வர்ணலட்சுமி 


திருப்பள்ளியெழுச்சி பாடல் 9:


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!

வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

கண்ணகத்தே நின்று களிதரு தேனே!

கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்

எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


விண்ணுலகில் இருக்கும் தேவர்களும், மற்றவர்களுக்கு நெருங்க முடியாத உயர்ந்த பரம்பொருளான சிவ பெருமானே! உன்னை வணங்கும் அடியர்களுக்கு அருள் செய்வதற்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்துள்ளாய். அருள் செய்து எங்களை வாழ வைத்தாய். இயற்கை வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிக்கும் எங்கள் பெருமானே! பரம்பரை பரம்பரையாக உனக்கு தொண்டு செய்து பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேன் போன்றவனே! பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்றவனே! கரும்பை போன்ற தித்திப்பானவனே! உன்னை விரும்பி வணங்கும் அடியவர்களின் எண்ணங்களில் நிறைந்து இருப்பவனே! உலக உயிர்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவனே!  உன்னுடைய அருட் பார்வை கிடைத்தால் உலக உயிர்கள் அனைத்தும் பிழைக்கும். அவற்றிற்கு அருள் செய்வதற்காக பெருமானே எழுந்தருள வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

news

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!

news

அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!

news

முழுமை - படைப்பின் நியதி (Perfection is the order of Life)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 28, 2025... இன்று இடமாற்றங்கள் ஏற்படும் நாள்

news

இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்