மதுரை: மதுரையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டுக்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வரும் மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகமலைபுதுக்கோட்டை, அச்சம்பத்து பகுதிகளில் தனியாக பூட்டியிருக்கும் வீடுகளை தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் மங்கி குல்லா கொள்ளையர்கள். அச்சம்பத்து அருகில் உள்ள ராம்கோ நகரில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் சிறிய கடப்பாறைகளையும் மற்ற உபகரணங்களையும் பயன்படுத்தி கதவை உடைக்க முயற்சித்துள்ளனர். அடுத்தடுத்து அருகில் இருந்த 4 வீடுகளைகளின் கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு வீட்டின் கதவை உடைக்க முற்பட்ட போது வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கோட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைக் கண்ட முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், கடந்தாண்டு தீபாவளியின் போது இந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அதே பகுதியை நோக்கி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்கள். மேலும் இவர்கள் குறிப்பிட்ட சமுாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சரியா தூக்கம் வர மாட்டேங்குதா.. பூண்டு யூஸ் பண்ணிப் பாருங்களேன்.. மாற்றம் தெரியும்
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
தினத்தந்தி நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்.சுகுமாருக்கு.. கலைஞர் எழுதுகோல் விருது
பெங்களூருவில் தமிழ் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?.. சூப்பர் சான்ஸ் வந்திருக்கு பாஸ்!
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி.. என்ன காரணம் தெரியுமா?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!
{{comments.comment}}