சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடிவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். சென்னை அழைத்து வந்து துக்கம் கேட்டுள்ளார் விஜய். இது யாரும் செய்யாத பித்தலாட்டம் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 போ் உயிரிழந்த நிலையில் ஏன் விஜய் திருச்சியில் கூட தங்கவில்லை. சம்பவத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார்.

2011ல் செய்த தவறுக்காக தான் ஓ.பன்னீர்செல்வம் இப்போது அனுபவிக்கிறார். கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அ.தி.மு.க.விலிருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். 12 சீட்தான் என்றார்கள்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டால், கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன். அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓ.பி.எஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் முறித்துவிட்டார் என்று பொய்யை சொல்லிவிட்டார். ஜெயலலிதா 15 தொகுதி ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரிவந்தது என்று தெரிவித்துள்ளார்.
Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?
2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!
" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு
NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்
தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு
Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!
பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்
{{comments.comment}}