சென்னை: கத்திரி வரப் போகுது கத்திரி வரப் போகுது.. ம்க்கும்.. இதுக்கு மேல தனியா வேற வரணுமாக்கும் அது.. அதான் வச்சு செய்யுதே.. கத்திரி கத்திரின்னு நாமதான் கத்திட்டிருக்கோம்.. ஆனால் மிஸ்டர் வெயில் பகவான், கதற கதற ஆல்ரெடி நம்மளை வெளுத்துத் துவச்சுட்டுதான் இருக்கார்.
வருடா வருடம் வெயில் வருவதும், நாம வியர்த்துக் கொட்டுவதும், விரக்தியில் புலம்புவதும் தொடர் கதைதான்.. இதுல நாம என்ன பார்க்கணும்னா.. நேத்து 105 டிகிரி வெளுத்துச்சா.. ரைட்டு விடு.. இன்னிக்கு எவ்வளவு அடிக்குது.. 101.99 டிகிரி பாரன்ஹீட் அடிச்சிருக்கு.. அப்ப நமக்கு லாபம்தான்.. நேத்தை விட இன்னிக்கு கம்மிதானே.. இப்படித்தான் பார்த்துப் பார்த்து ஆறுதல் பட்டுக்கணும்.. அதானே உலக வழக்கம்!
இப்படித்தாங்க நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சுட்டிருக்கு.. சரி அதை விடுங்க.. மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கப் போகுதாம்.. இதைக் கேட்டது முதலே நம்மாளுங்க டென்ஷனாயிட்டாங்க.. அப்ப இம்புட்டு நாளா என்ன பனி மழையா பெய்ஞ்சுட்டிருக்கு அப்படின்னு வருடா வருடம் புலம்பும் அதே பழைய புலம்பலை பொலம்பிட்டிருக்காங்க.. வாங்க நாமளும் சேர்ந்து புலம்புவோம்.. மீம்ஸ் மூலமா!
ஹேய்.. மே 4ம் தேதி உங்களைப் பார்க்க வரப் போறேன்!

அச்சச்சோ..எப்படி கடுங்குளிரை தாங்கிக்கப் போறோம்னு தெரியலையே!

மாடில துணி காயப் போட போனது தப்பாடா!

அக்னி நட்சத்திரத்தை பகல்ல பாக்க முடியலையே ஏன்

பிரபல எழுத்தாளர், கவிஞர்.. ஈரோடு தமிழன்பன் காலமானார்
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
அத்தே.. அத்தே...!
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!
சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!
{{comments.comment}}